"இன்னும் கூடுதல் வரி விதிப்போம்!" இந்தியாவுக்கு மேலும் சிக்கலை தரும் டிரம்ப்? அமெரிக்கா திட்டம் என்ன
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்திருந்தது. இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரஷ்யா எண்ணெய் வாங்குவோர் மீது இன்னும் கூடுதல் வரியை விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க டிரஷரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த பல ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என யார் வந்தாலும் இந்தியா உடன் சீரான உறவையே வைத்திருப்பார்கள். அதிபர் டிரம்ப் 2016- 2020 வரை முதலில் அதிபராக இருந்த போதும் இரு நாடுகளுக்கும் இடையே சீரான உறவே இருந்தது. ஆனால், டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அதுபோல இல்லை.

இந்தியா மீதான வரி
ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது டிரம்ப் வரிகளை அறிவித்தார். அதாவது ரஷ்யா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே, அந்த நிதியை உக்ரைன் போரில் புதின் பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே வரிகளை விதிப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார். கடந்த மாதம் தொடக்கத்தில் முதலில் 25% வரி அமலுக்கு வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் கூடுதலாக 25% வரி அமலுக்கு வந்தது.
இந்த வரி இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 40% வரை குறையலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்தியா மீது இன்னும் கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க டிரஷரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ள கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கூடுதல் வரி
அதாவது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரியை விதித்தால் ரஷ்யப் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து உர்சுலா தன்னையும் தொடர்பு கொண்டு ரஷ்யா மீது மேலும் அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்ததாக பெசென்ட் கூறினார். ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் ஆனால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து என்ன நடக்கும்
அவர் மேலும் கூறுகையில், "உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? ரஷ்யப் பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்று இரண்டிற்கும் இடையே போட்டி தான் இப்போது இருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும். அப்படி வரிகளை விதித்தால் ரஷ்யப் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும். அதுதான் ரஷ்ய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்" என்றார்.
இந்தியாவுக்கு சிக்கல்?
அதாவது பெசென்ட் நேரடியாக இந்தியா என்ற பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் சீனாவும் மட்டுமே அதிகமாகக் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. அதில் சீனா மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது. எனவே, கூடுதல் வரி விதித்தால் அது இந்தியாவையே மேலும் மோசமாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications