அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம்: ஜோ பிடன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பில் இருந்து அமெரிக்காவை மீட்பதுடன் நடுத்தர வர்க்கத்தை மீள கட்டி எழுப்புவதும் தங்களது இலக்காக இருக்கும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப், ஜோ பிடன் காலங்களில் நடுத்தர வர்க்கத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றன. டிரம்ப், பிடன் ஆகியோரால் நடுத்தர வர்க்கம் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பதும் ஒரு விவாதமாக இருக்கிறது.

We are going to rebuild middle class: Joe Biden

இந்த நிலையில் அதிபர் தேர்தல் நடைபெற்றும் கொண்டிருக்கும் போது ஜோ பிடன் இது தொடர்பாக கூறியதாவது:

நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதேநேரத்தில் என்னை அதிபராக தேர்வு செய்தால் நான் அமெரிக்க அதிபர் பதவியில் அமருவேன்.

நான் அமெரிக்க அதிபரானால் ரெட் ஸ்டேட்ஸ், ப்ளூ ஸ்டேட்ஸ் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் ஒருங்கிணைந்த அமெரிக்கா- யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா மட்டுமே இருக்கும்.

கொரோனா வைரஸின் பிடியில் இருந்து நாட்டை மீட்பது முதன்மை பணியாக இருக்கும். மேலும் நடுத்தர வர்க்கத்தினரையும் மீள கட்டி எழுப்புவதும் முதன்மையான செயல்பாடாக இருக்கும். இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+