கொரோனா பாதிப்பு... இந்தியாவுக்கு உதவத் தயார்... மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் - பிடன், கமலா
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு அமெரிக்கா உதவ உறுதியாக உள்ளது என்று ஜோ பிடன் கூறியுள்ளார். இந்திய மக்களுக்காக, அயராது பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பக் காலத்தில் இந்தியா எங்கள் மருத்துவமனைகளுக்கு உதவி அனுப்பியது. இப்போது இந்திய மக்கள் கஷ்டப்படும்போது அமெரிக்கா உதவ உறுதியாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். இந்திய மக்களுக்காக, அயராது பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கமலா ஹாரிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. இந்தியாவில் கொரோனா சுனாமி வேகத்தில் வீசி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்து வருகின்றனர்.
மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி இன்மையால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். தினம் தினம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளனர்.
|
ஜோ பிடன் உறுதி
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தன் ட்வீட்டில், "கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பக் காலத்தில் இந்தியா எங்கள் மருத்துவமனைகளுக்கு உதவி அனுப்பியது. இப்போது இந்திய மக்கள் கஷ்டப்படும்போது அமெரிக்கா உதவ உறுதியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். என்று கூறியுள்ளார். இந்தியாவின் நிலைமைகளை நெருக்கமாக கவனித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
|
கமலா ஹாரிஸ் ட்வீட்
அதே போல் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசுடன் அமெரிக்கா நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் உதவிகளை அவசரமாக அனுப்ப உறுதிபூண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ். உதவியை அளித்தாலும் இந்திய மக்களுக்காக, அயராது பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்
சமீபத்திய கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு அமெரிக்கா அதிபர், துணை அதிபர் தரப்பிலிருந்து முதல் பதிவு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் அவசர உதவிகளுக்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் பிடன், கமலா ஹாரிஸுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

உதவ தயங்குவது ஏன்
முன்னதாக அதிபர், துணை அதிபர் மீது அமெரிக்காவில் உள்ள இந்திய நண்பர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. அதாவது நட்பு நாடான இந்தியாவுக்கு உதவுவதில் ஏன் இத்தனை தயக்கம் என்று விமர்சனங்கள் அங்கு எழுந்தன. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த திடீர் அவசர உதவிகளுக்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் பைடன், கமலா ஹாரிஸுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தும் கொரோனா
இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் அலையில் பரவி வரும் புதிய கொரோனா உலகிற்கே பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதனைக் கட்டுப்படுத்துவது உலக சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்கா கருதுகிறது. இதனையடுத்து இந்தியாவுக்கு மருத்துவ சப்ளைகள், தடுப்பூசி இடுபொருட்கள், உற்பத்தி பொருட்கள் இன்னபிற உதவிகளை செய்ய அமெரிக்கா தொடங்கியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications