Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டும் கைது! வந்து விழுந்த கேள்வி! ஒரே வரியில் டிரம்ப் சொன்ன பதில்! ஆடிப்போன அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் முறைகேடு வழக்கில் ஜார்ஜியா மாகாணத்தில் கைதான நிலையில், இது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அப்போது டிரம்பை ஜனநாயக கட்சியின் பைடன் வீழ்த்தியிருந்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து தேர்தலில் மிக பெரிய முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற புகார்களைச் சொல்லி வந்தார்.

 What Donald Trump said After Arrest Over Election Fraud in georgia

ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழக்கவும் செய்தனர். டிரம்ப் ஆதாரமே இல்லாமல் முன்வைத்த குற்றச்சாட்டுகளே இந்த வன்முறைக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

டிரம்ப்: இது தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பிய நிலையில், டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவர் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் அதிபர் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். குற்றவாளிகளுக்கு எடுப்பது போன்ற போட்டோக்களும் அவரிடம் எடுக்கப்பட்டது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே டிரம்ப் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.

என்ன சொன்னார்: இதற்கிடையே கைதுக்குப் பிறகு டிரம்ப் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நீதி கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், மீண்டும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகச் சாடினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இங்கு நீதியைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை.. அடுத்தாண்டு நடக்கும் தேர்தலிலும் முறைகேடு செய்யவே இப்படிச் செய்கிறார்கள்.. என்ன நடந்தாலும் நான் வெல்வது உறுதி" என்று அவர் அசால்டாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

என்ன முறைகேடு: அதேநேரம் என்ன முறைகேடு செய்கிறார்கள் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.. இருப்பினும், தனது பிரசாரத்தைத் தடுக்க முயல்வதாக அவர் பைடனை கண்டித்தார். டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் போட்டோ எடுத்த பிறகு கொஞ்ச நேரத்தில் $200,000 பத்திரத்தில் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் நடந்த 2020 தேர்தல் முடிவை 18 பேருடன் இணைந்து மாற்ற முயன்றார் என்பதே டிரம்ப் மீது இருக்கும் குற்றச்சாட்டு ஆகும். இதில் இப்போது டிரம்ப் கைதான நிலையிலும், அவர் வெறும் 30 நிமிடங்களுக்குக் குறைவாகவே சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

போட்டோ: டிரம்ப் கைதான போது மற்ற குற்றவாளிகளைப் போலவே அவரது போட்டோவும் எடுக்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் குற்ற வழக்கில் கைதாகி இதுபோல நடப்பது இதுவே முதல்முறையாகும். சிறையில் எடுக்கப்பட்ட டிரம்ப் போட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் அடர் நீல நிற உடை, வெள்ளை சட்டை மற்றும் சிவப்பு டை அணிந்துள்ளார்.

ட்ரம்புக்கு அந்த சிறையில் கைதி எண் "PO1135809" வழங்கப்பட்டது. மேலும், வழக்கம் போல அவரது உயரம் மற்றும் எடை அளவிடப்பட்டது. அதில் அவரது உயரம் ஆறு அடி மூன்று அங்குலம் என்றும் அவரது எடை 97 கிலோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 4 முறை கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ளார்.

அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசார பயணத்திற்கு இடையே டிரம்ப் இதுபோல நீதிமன்றங்களுக்கும் சென்று வருகிறார். முதலில் நியூயார்க்கில் ஆபாசப் பட நடிகைக்கு முறைகேடாகப் பணம் கொடுத்த குற்றச்சாட்டில் கைதானார். அதன் பிறகு புளோரிடாவில் அரசின் ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்ட குற்றச்சாட்டிலும் அடுத்து இதே தேர்தல் முறைகேடு வழக்கில் வாஷிங்டனிலும் அவர் கைதானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+