"நோ டென்ஷன்.." ஆபாச அழகி விவகாரம்! பீச் கிளப்பில் கூலாக கோல்ப் விளையாடும் டிரம்ப்! ரியல் பிளான் என்ன
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் இன்று ஆஜராகவுள்ளார். தான் கைதாவோம் என்பது குறித்தெல்லாம் டிரம்ப் துளியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இப்போது அதிபராக இருக்கும் பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு இறுதியுடன் முடிகிறது. அடுத்தாண்டு இறுதியில் அங்கே அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டது.
அங்கே அதிபர் தேர்தலுக்கு வேட்பாளரை எல்லாம் நேரடியாக அறிவித்துவிட மாட்டார்கள். முதலில் கட்சிக்குள்ளேயே பல கட்ட தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பின்னரே பெரும்பான்மை அடிப்படையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்தவர் டிரம்ப். அப்போது அவர் குடியரசு கட்சி சார்பில் அதிபராகத் தேர்வாகியிருந்தார். அவர் அதிபராக இருக்கும் போதே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வந்தார். 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அமெரிக்கா நாடாளுமன்றத்திலேயே வன்முறையைத் தூண்டிவிட்ட சம்பவங்கள் எல்லாம் அங்கே நடந்தது.

டிரம்ப்
அந்த விவகாரத்தில் டிரம்ப் மீதான விசாரணை நடக்கவுள்ளது. ஆனால், அதற்கு முன்பே டிரம்ப் இப்போது ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டார். ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்ததை அவர் தேர்தல் செலவாகக் காட்டியதே பிரச்சினைக்குக் காரணமாகும். இந்த விவகாரத்தில் டிரம்ப் குற்றம் செய்தவர் என்று ஜூரி சொல்லிவிட்டது. இது ஒரு பெலனி குற்றம் என்பதால், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜாராக உள்ளார்.

கோல்ப்
இதற்காக அவர் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஏற்கனவே நியூயார்க் வந்துவிட்டார். டிரம்பிற்கு ஆதரவாளர்கள் நியூயார்கில் மிகப் பெரியளவில் போராட்டங்களை எல்லாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டிரம்ப் இது குறித்தெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வீக் எண்டில் டிரம்ப் கூலாக கோல்ஃப் விளையாடியதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல ஆக்டிவாக இருந்த டிரம்ப், தனது ஆலோசகர்களையும் சந்தித்து மீட்டிங் போட்டுள்ளார்.

பாசிட்டிவ் நியூஸ் தான்
இந்த வழக்கு அரசியல் ரீதியாக தனக்கு எப்படி பாசிட்டிவாக முடியும் என்பதையும் அவர் விளக்கியதாகத் தெரிகிறது. மீண்டும் அமெரிக்காவைச் சிறந்த நாடாகத் தான் மாற்ற முயன்றதாகவும், இருப்பினும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே தனக்கு எதிராக இந்த பிரசாரத்தை தூண்டிவிடுவதாகவும் சொல்லி டிரம்ப் பிரசாரம் செய்ய உள்ளார். இது அரசியல் ரீதியாக தனக்குப் பெரிய பூஸ்ட் தரும் என்றே டிரம்ப் நினைக்கிறார்.

நோ டென்ஷன்
ஏனென்றால் பொதுவெளியில் டிரம்ப் தான் நிரபராதி என்றே தொடர்ந்து கூறி வருகிறார். ஸ்ட்ராமி டேனியல்ஸை சந்தித்ததேயில்லை என்றும் சொல்லி வருகிறார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், டிரம்ப் வீக் எண்டில் பாம் பீச் கோல்ஃப் மைதானத்தில் கோல்ப விளையாடியுள்ளார். ஜாலியாக பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டு அவர் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தனது டிரேட்மார்க் சிவப்பு நிற மேக் அமெரிக்கா கிரேட் தொப்பி மற்றும் வெள்ளை போலோ சட்டை அணிந்து கூலாக அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

டிரெண்டிங் படம்
அங்கேயே டிரம்ப் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக வெளியே கூடிவிட்டனர். அப்போது டிரம்ப் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த படங்களும் இணையத்தில் டிரெண்டானது. மேலும், டிரம்ப் இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், அப்போது அங்கே போட்டோ எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் டிரம்ப் இன்று ஆஜராக உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications