சீனாவின் பிஎப்7யை விட வேகம்.. அமெரிக்காவை முடக்கும் XBB.1.5 வைரஸ்.. இந்தியா தப்புமா? பரபர எச்சரிக்கை
வாஷிங்டன்: சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆபத்தாக அமெரிக்கா உருமாறி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் தற்போது ஓமிக்ரானின் உருமாறிய XBB.1.5 வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. அங்கு பதிவாகும் மொத்த பாதிப்பில் இந்த வகை வைரஸ் தான் 40 சதவீதம் பேரை தாக்கும் நிலையில் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இந்நிலையில் தான் XBB.1.5 வகை வைரஸ் என்பது என்ன? இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை முடக்கியது. அடிக்கடி கொரோனா வைரஸ் உருமாறி தாக்க தொடங்கியது.
இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இருப்பினும் ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது.

சீனாவில் பிஎப் 7 வைரஸ்
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில் பல ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். சீனாவில் தற்போது ஓமிக்ரான் உருமாறிய ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, கனடா, மெராக்கோ உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவில் XBB.1.5 வைரஸ்
இது ஒருபுறம் இருக்க தற்போது அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அனைவரையும் அச்த்தில் உறைய வைத்துள்ளது. ஏனென்றால் தற்போது அமெரிக்காவில் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 40 சதவீதம் பேர் இந்த வகை வைரஸால் தான் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக நியூயார்க்கில் இந்த வைரஸ் என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் நுழைந்த வைரஸ்
இந்த XBB.1.5 வைரஸ் தற்போது அமெரிக்காவின் 10 மாகாணங்களில் பரவி உள்ளது. இந்த வகை வைரஸின் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. டிசம்பர் 24ல் இந்த வைரஸ் பாதிப்பு என்பது அமெரிக்காவில் 21.7 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் 31ல் 44.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை விட அமெரிக்காவில் பரவும் XBB.1.5 வைரஸ் சார்ந்த ஆய்வுகள் தொடங்கி உள்ளன. இந்த வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை போல் அமெரிக்காவில் பரவும் XBB.1.5 கொரோனா வைரசும் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

ஓமிக்ரான் உருமாறிய வைரஸ்
இதற்கிடையே தான் XBB.1.5 வைரஸ் எப்படி உருவானது? இதன் வீரியம் என்ன? தடுப்பூசிக்கு அடங்குமா? என்பன உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு: அமெரிக்காவில் 40 சதவீத மக்களை தற்போது தாக்கி வரும் இந்த XBB.1.5 எனும் வைரசும் ஓமிக்ரானின் உருமாறிய வைரஸ் தான். இது ஓமிக்ரான் பிஏ.2 வகை வைரஸின் துணை மாறுபாடாகும். சீனாவில் பரவும் பிஎப் 7 வைரஸை போல் இதுவும் ஓமிக்ரான் வைரஸில் இருந்து தான் உருமாறி உள்ளது. இது முந்தைய வைரஸை விட பலமடங்கு வரை வேகமாக பரவும் தன்மையுடன உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர்.

தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?
இதனால் தான் தற்போது பெரியளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. XBB.1.5 வைரஸ் கொரோனா தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு திறனை குறைக்கும் திறன் கொண்டுள்ளதோடு, தடுப்பூசி மூலம் கிடைத்த தடுப்பாற்றலில் இருந்து இந்த வைரஸ் எளிதாக தப்பித்து விடும் தன்மையுடன் உள்ளது. மேலும் உடலில் உள்ள செல்களில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் இது ஆபத்தானதாக கருதப்படுவதாக ஆய்வாளர்கள் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகின்றனர்.

நிபுணர்கள் எச்சரிக்கை மணி
இதுபற்றி சமீபத்தில் மினசோட்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டேர்ஹோம் கூறுகையில், ‛‛உண்மையிலேயே தற்போதைய சூழலில் கொரோனா வைரஸில் மோசமான உருமாறிய வைரஸ் என்பது XBB ஆகும்'' என எச்சரிக்கை மணியடித்தார். இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் ஆண்ட்ரூ பெகோஸ் கூறுகையில், ‛‛XBB.1.5 வைரஸ் அதன் குடும்பத்திலும் இருந்து வேறுபட்டுள்ளது. இது உயிரணுக்களுடன் பிணைந்து பிறழ்வை உண்டாக்கும் தன்மையும் உள்ளது. இதனால் இந்த வைரஸ் பாதிப்பு மக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்'' என்றார்.

இந்தியாவிலும் பாதிக்குமா?
இந்த XBB வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உருமாற தொடங்கியது. இது XBB.1 மற்றும் XBB.1.5 என உருமாறியது. XBB வேரியண்ட்களை போல தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது ஆபத்தானதாக அமையம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் அவை கொரோனா தடுப்பூசியின் செயல் திறனில் இருந்து தப்பிக்க வாய்ப்பாக அமையும். தற்போதைய சூழலில் இந்தியாவில் ஒருவருக்கு மட்டுமே XBB.1.5 வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது எத்தகைய பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் கூட மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications