"கசாப்பு பன்றி!" 4 கோடியை ஏமாந்த இந்திய பெண்.. இனிக்க இனிக்க பேசிய டீப் ஃபேக் ஏஐ! அமெரிக்காவில் ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியா பெண் ஒருவர் pig butchering என்ற முறையில் ஏமாற்றப்பட்டுள்ளது. அவரது அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் "பன்றி அறுப்பது" pig butchering முறையில் ஏமாந்து போய் உள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசிக்கும் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரேயா தத்தா என்பவர் தான் மோசடிக்கு இரையாகியுள்ளார்.

4 கோடி அபேஸ்: கிரிப்டோகரன்சி காதல் மோசடியில் சிக்கிய அவர் சுமார் $450,000 சுமார் ரூ. 4 கோடியை இழந்துள்ளார். அதிநவீன டீப் ஃபேக் உள்ளிட்ட அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளனர். இதனால் ஸ்ரேயா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் முதலில் பாதிக்கப்பட்டோர் மீது அதீத அன்பைச் செலுத்துவது போலப் பேசுவார்கள். மேலும், முதலீடு செய்தால் லாபம் கொட்டும் என்றெல்லாம் அளந்து விடுவார்கள் .
பன்றி, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வெட்டும் முன்பு எப்படிப் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வார்களோ அதேபோல செய்வார்கள். இதன் காரணமாகவே இதற்கு pig butchering என்று பெயர் வைத்துள்ளனர். இவை அத்தனையும் ஸ்ரேயா, ஹிங்க் என்ற டேட்டிங் ஆப்பில் ரைட் ஸ்வைப் செய்ததில் இருந்து தொடங்கியது. அவர் அந்த செயலியில் அன்செல் என்ற நபரை மீட் செய்துள்ளார். அன்செல் பிலடெல்பியாவில் பிரெஞ்சு ஒயின் வியாபாரி என்று கூறி தன்னை தானே அறிமுகப்படுத்தியுள்ளார்.
என்னாச்சு: அன்செல் இனிக்க இனிக்கப் பேசியதில் ஸ்ரேயா சில நாட்களில் தனது வாட்ஸ்அப் நம்பரை கொடுத்துவிட்டாராம். வாட்ஸ்அப் நம்பர் வாங்கிய உடன் அன்செல் தனது ஹிங்க் கணக்கை டெலிட் செய்துவிட்டார். அடடே நம்முடன் பேசுவதால் டேட்டிங் செயலி கணக்கையே டெலிட் செய்துவிட்டாரே என ஸ்ரேயாவும் பார்த்து வியந்துள்ளார். ஆனால், பின்னால் இருந்த ஆப்பு அப்போது அவருக்குத் தெரியவில்லை.
அதன் பிறகு இருவரும் போட்டோ, வீடியோவை பகிர்ந்துள்ளனர். அவ்வளவு ஏன் வீடியோகால் மூலமாகக் கூட இருவரும் பேசியுள்ளனர். அப்போதும் அன்செல்லை முழுமையாக ஸ்ரேயா நம்பியுள்ளார். ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் தான் விவாகரத்து நடந்த நிலையில், ஆதரவாக இருப்பது போலப் பேசியுள்ளார். மேலும், வரும் காலத்தில் இதுபோல எதாவது நடந்தாலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் ஓய்வு பெற்ற பிறகு பிரச்சினை வராது என அன்செல் கூறியுள்ளார்.
மோசடி: அதைக் கட்டு அன்செலும் அவர் சொன்ன கிரிப்டோகரன்சி டிரேடிங் செயலியை டவுன்லோட் செய்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். முதலில் லாபம் வந்தது போல இருக்கவே தொடர்ந்து முதலீடு செய்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவின் தனிப்பட்ட வருமான வரி குறித்த தரவுகளை அது கேட்டுள்ளது. அப்போது தான் ஸ்ரேயாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஸ்ரேயா தனது சகோதரரிடம் இது குறித்துக் கூறியுள்ளார்.
ஸ்ரேயாவின் சகோதரர் கொஞ்சம் விசாரிக்கவே அன்செல் செய்தது மிகப் பெரிய மோசடி என்பது தெரிய வந்துள்ளது. உண்மையில் அன்செல் என்று ஒரு கேரக்டரே இல்லையாம். ஜெர்மனி நாட்டை சார்ந்த ஒருவர் போலியான ஏஐ அடையாளத்தை வைத்து மோசடி செய்துள்ளார். அதன் பிறகே தானா ஏமாற்றப்பட்டதை ஸ்ரேயா உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார்.
ஆனாலும் ஸ்ரேயாவுக்கு இதில் நிதி இழப்பு மட்டும் இல்லை. அவர் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னிடம் அன்பாகப் பேசிய நபரே இப்படிச் செய்துவிட்டாரே என்று ஸ்ரேயா கடும் சோகத்தில் இருக்கிறார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications