பார்க்க வெறும் பட்டாணி சைஸ் தான் இருக்கு.. ஆனா இது மட்டும் இல்லைனா.. ஆளே காலியாம்! பரபர ஆய்வு
வாஷிங்டன்:நம் மூளையில் வெறும் பட்டாணி சைஸில் இருக்கும் ஒரு சின்ன விஷயம் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன பொருள் அப்படி அது என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மனித உடல் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பல ஆயிரம் வருடங்களாக நமது உடலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே நாம் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருக்கிறது. நமது உடலில் ஒவ்வொரு செயலை செய்யவும் ஒவ்வொரு உறுப்பு இருக்கிறது.

பட்டாணி சைஸ்: அப்படி மனித மூளையில் சிறிய பட்டாணி சைஸில் இருக்கும் உறுப்பு தான் சுப்பீரியர் கோலிகுலஸ். இது நாம் முன்பு நினைத்ததைக் காட்டிலும் மூளை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோலிகுலஸ் பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இ லைப் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்து இன்ஸ்டிடியூட் ஃபார் நியூரோ சயின்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை செய்துள்ளனர். மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளும் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்து பொருட்களை எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதே நோக்கமாக இருந்தது.
கிணத்தை காணோம் கூட ஓகே.. ஆனா இங்கே ஒரு கடலையே காணோம்! அதுவும் சில ஆண்டுகளில்..அதிர வைக்கும் பின்னணி
என்ன மேட்டர்: அதாவது நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை நாம் கண்களால் பார்க்கிறோம். ஆனால், அது இந்த பொருள் தான் என்பதை நமது மூளை தான் அடையாளம் காண்கிறது. கண்ணால் நாம் பார்க்கும் தகவல்களைக் கொண்டு இது இந்த பொருள் தான் என்பதைக் கண்டறிய மூளை தான் உதவுகிறது. இவை எல்லாம் நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிவதால் இது குறித்து எல்லாம் நாம் யோசிக்க மாட்டோம்.
ஆனால், நீண்ட காலமாகவே இது எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்துள்ளது, இதற்கு விசுவல் கார்ட்ஸ் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், அது மட்டும் காரணம் இல்லை என்பதைத் தான் ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். அதேபோல சுப்பீரியர் கோலிகுலஸ் என்ற அமைப்பும் இதில் பங்காற்றலாம் என நினைத்தார்கள். விசுவல் கார்ட்ஸ் நேரடியாகக் கண்களில் இருந்து தகவல்களைப் பெறும் நிலையில், இதற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வாளர்கள் எலிகள் மீது சோதனை நடத்தினர்.

ரொம்ப முக்கியம்: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த ஆய்வில் நாங்கள் எலிகளுக்கு ஆப்டோஜெனெடிக்ஸ் கொடுத்து உயர்ந்த கோலிகுலஸ் செயல்பாடுகளை ஆப் செய்தோம். சுப்பீரியர் கோலிகுலஸ் என்ன செய்கிறது என்பதைப் பார்ப்பதற்கே இந்த ஆய்வை செய்தோம். அதில் தான் விசுவல் கார்ட்ஸ் மட்டுமின்றி சுப்பீரியர் கோலிகுலஸ் அமைப்பும் நாம் சுற்றி இருக்கும் பொருட்களைக் கண்டறிய உதவுகிறது. மூளையில் பட்டாணி அளவில் அமைந்துள்ள இந்த சுப்பீரியர் கோலிகுலஸ் இல்லை என்றால் நம்மால் அருகே என்ன பொருள் இருக்கிறது என்பதைக் கூட கண்டறிய முடியாது" என்றனர்.

அதேபோல எலிகளுக்கு இந்த சுப்பீரியர் கோலிகுலஸ் செயலிழக்க வைக்காமல் ஆய்வு செய்துள்ளனர். அப்போது எந்த டாஸ்க்காக இருந்தாலும் அருகே எதாவது பொருட்களிடம் எலிகள் செல்லும் போது இந்த சுப்பீரியர் கோலிகுலஸ் மிகவும் ஆக்டிவாக மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை அடையாளம் காண சுப்பீரியர் கோலிகுலஸ் என்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிய உதவியுள்ளது.
இந்த சுப்பீரியர் கோலிகுலஸ் இல்லை என்றால் சுற்றி இருக்கும் பொருட்களை நம்மால் பார்க்க முடிந்தாலும் அது என்ன என்று அடையாளம் கண்டிருக்க முடியாது. இது ஒட்டுமொத்தமாக நாம் வாழும் வாழ்க்கையை காலி செய்வதாக அமைந்துவிடும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications