கேலக்ஸிக்கு வெளியே "மர்ம" சிக்னல்.. இப்படியொன்றை பார்த்ததே இல்லையே.. ஸ்டன் ஆன ஆய்வாளர்கள்! என்னாச்சு
வாஷிங்டன்: நமது கேலக்ஸிக்கு வெளியே இருந்து வந்த ஒரு வித மர்ம சிக்னல்களை அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பல மர்மங்களுக்கு விடை தரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த பிரபஞ்சம் என்பது பல நூறு கிரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. அப்படியிருக்கும் இந்த கிரகத்தில் பூமியைப் போலவே வேறு சில கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

இதன் காரணமாக கேலக்ஸியில் உள்ள மற்ற கிரகங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நாசா இந்த ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வேற்றுக்கிரக வாசிகள் குறித்த பல முக்கிய ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாசா ஆய்வாளர்கள்: இதற்கிடையே நாசா ஆய்வாளர்கள் நமது கேலக்ஸிக்கு வெளியே இருந்து வந்த எதிர்பாராத "சிக்னல்" ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.. இந்த சிக்னல் ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருக்கிறது. இது என்ன சிக்னல்.. இது எப்படித் தோன்றுகிறது.. எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வாளர்களால் இன்னும் விளக்க முடியவில்லை.
ஃபெர்மி காமா-ரே என்ற சாட்டிலைட் டெலஸ்கோப்பில் இருந்து 13 ஆண்டுகள் பெறப்பட்ட சிக்னல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த நிலையில், அதில் தான் அவர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கேலக்ஸி மண்டலத்திற்கு வெளியே உள்ள எதிர்பாராத மற்றும் இன்னும் விவரிக்கப்படாத அம்சம் என்று நாசா ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
காமா கதிர்கள்: சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளால் காமா கதிர்களைக் கண்டறிய முடியும்.. காமா கதிர்கள் என்பது ஆற்றல்மிக்க ஒளியின் பெரிய வெடிப்புகளாகும். அதை நம்மால் வெறும் கண்களாலும் கூட பார்க்க முடியும். நட்சத்திரங்கள் வெடிக்கும் போது அல்லது அணு வெடிப்பு ஏற்படும் போது தான் அவை பெரும்பாலும் உருவாகும். வேறு ஒரு ஆய்வுக்காக இதைப் பகுப்பாய்வு செய்யும் போதே ஆய்வாளர்கள் இந்த மர்ம சிக்கெனல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதை முற்றிலும் தற்செயலான கண்டுபிடிப்பு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தளவுக்கு வலிமையான சிக்னலை கண்டுபிடிப்போம் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது ஆய்வாளர்கள் வேறு ஒரு இடத்தில் காமா கதிர்கள் இருக்கும் என்று நினைத்து ஆய்வை தொடங்கிய நிலையில், சம்பந்தமே இல்லாத மற்றொரு இடத்தில் அவர்கள் காமா கதிர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரே மாதிரி இருக்கே: இந்த ஆய்வு குறித்த முடிவுகள் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் உள்ள ஆய்வாளர்களும் இதேபோல காஸ்மிக் காமா கதிர்களைக் கண்டுபிடித்து இருந்தனர். இந்த இரு கண்டுபிடிப்புகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரண்டும் கிட்டதட்ட ஒரே இடத்தில் இருக்கும் நிலையில், அவை ஒரே இடத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண்வெளி துறையில் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் இது குறித்த ஆய்வுகள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவை பூமியின் தோற்றம், பிரபஞ்சம் உருவான விதம் உள்ளிட்ட பல மர்மமான கேள்விகளுக்குப் பதிலைத் தரும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசா இந்த விவகாரம் குறித்துக் கூடுதலாக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications