Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சீக்ரெட் அட்டாக்.." நள்ளிரவில் இறங்கிய ஏலியன்கள்.. அணு ஆயுத தளம் மீது பரபர! விமான படை கேப்டன் பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க விமானப் படையில் பயணித்த கேப்டன் ஒருவர் யுஎப்ஓ அட்டாக் குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பிரபஞ்சத்தில் நிச்சயம் நம்மைப் போலவே மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கும் என்பதை ஆய்வாளர்களின் கருத்து. அவை மனிதர்களைப் போலவும் இருக்கலாம் அல்லது வேறு விதமாகவும் கூட இருக்கலாம்.

இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் நிச்சயம் உயிரினங்கள் இருக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்தே வருகிறது.

 What is the Mystery UFO Attack On US Air Force Base Left Guards in past

அமெரிக்கா: குறிப்பாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வேற்று கிரகவாசிகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த வேற்றுகிரகவாசிகள் பொதுவாக UFO எனப்படும் பறக்கும் தட்டு மூலமாகவே பூமிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இது இப்போது என்று இல்லை, கடந்த 50 ஆண்டுகளாகவே பறக்கும் தட்டுக்கள் குறித்த மர்மம் நீட்டித்தே வருகிறது. பறக்கும் தட்டுக்கள் உண்மையா இல்லை கற்பனையா என்பதிலேயே குழப்பம் இருக்கிறது.

ஒரு தரப்பினர் இதை ஏற்கவில்லை என்ற போதிலும், மற்றொரு தரப்பினர் இதுவே ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான காரணம் என்கிறார்கள். இந்தச் சூழலில் இப்போது ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன் ஒருவர் தனது அணுசக்தி ஏவுகணை தளம் யுஎஃப்ஒவின் தாக்குதலுக்கு உள்ளான திகிலூட்டும் தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவத்தை அமெரிக்க அரசு மூடி மறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 What is the Mystery UFO Attack On US Air Force Base Left Guards in past

எப்போது: இந்த பகீர் தகவலை இப்போது பகிர்ந்துள்ளவர் ராபர்ட் சலாஸ். ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டனான இவர் 1967இல் மொன்டானாவில் உள்ள மால்ஸ்ட்ரோம் தளத்தின் இன்- சார்ஜ்ஜாக இருந்தார். இந்தச் சம்பவம் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நடந்துள்ளது.

அந்த மால்ஸ்ட்ரோம் தளத்தில் அப்போது 10 அணு ஏவுகணைகளை இருந்தன. இதனால் அங்கே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது அந்த தளத்தின் மீது அவர்கள் எட்டு ஆரஞ்சு நிற விளக்குகளைக் கண்டனர். அணு ஆயுதங்களுக்கு இருந்த பாதுகாப்பை அந்த லைட்கள் திடீரென விலக்கிய நிலையில், அங்கே இருந்த வீரர்கள் அஞ்சி ஓடியதாகவும் ராபர்ட் சலாஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல நேஷனல் ஜியோகிராஃபிக்கின் புதிய தொடர் ஒன்றில் தான் ராபர்ட் சலாஸ் இந்த அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளார். அந்த ஓய்வுபெற்ற கேப்டன் மேலும் கூறுகையில், "முதலில் எனக்கு பேஸில் இருந்து கால் வந்தது. அங்கே திடீரென லைட்கள் தெரிவதாகச் சொன்னார்கள். அப்போது அதை நான் புறக்கணித்துவிட்டேன்.

 What is the Mystery UFO Attack On US Air Force Base Left Guards in past

என்ன நடந்தது: 'யுஎப்ஓக்களை சொல்கிறீர்களா எனக் கேட்டுக் கட் செய்துவிட்டேன். இருப்பினும், சுமார் 5 நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் அழைத்தார். அப்போது அவரது குரல் நடுங்கியது. நாம் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டோம் என்றே முதலில் நினைத்தேன். அணு ஆயுதங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டும் வகையில் அங்கே சிவப்பு நிற விளக்குகள் எரிந்தன. இதைப் பார்த்தவுடன் என்னால் அச்சப்படாமல் இருக்க முடியவில்லை" என்றார்.

இந்த ஷாக் சம்பவத்தால் அமெரிக்காவிடம் கைவசம் இருந்த குறிப்பிட்ட அணுசக்தித் திறனில் குறிப்பிட்ட அளவு அழிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உரிய விசாரணையையும் நடத்தவில்லையாம். இந்தச் சம்பவம் குறித்து எதுவும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று கையெழுத்தும் வாங்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து முதலில் அமெரிக்க விமானப்படை விசாரித்தது. இருப்பினும், 3 ஆண்டுகள் ஆன பிறகும் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் யுஎப்ஓ விசாரணையை அமெரிக்கா நிறுத்தியது. அதன் பிறகு இது குறித்து எதையும் அவர்கள் சொல்லவில்லை. இதனால் ஆபத்து இல்லை என அவர்கள் கூறினாலும் அதில் உண்மை இல்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+