வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பரவிய கொரோனா? திடீரென கிளம்பிய பரபரப்பு.. மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றியதா அல்லது வூஹான் வைராலஜி மையத்திலிருந்து செயற்கையாகத் தோன்றியதா என்பது குறித்த குழப்பம் தொடரும் நிலையில், அமெரிக்காவில் புலானய்வு துறை வெளியிட்டுள்ள புதிய தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய, கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்த வைரஸ் பரவலுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டாலும்கூட இன்னும் வைரசின் தன்மை குறித்து முழுமையாக நமக்குத் தெரியவில்லை.
எனவே, கொரோனா வைரஸ் பற்றிய தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

கொரோனா தோற்றம்
கொரோனா வைரஸ் வூஹான் நகரில் அமைந்துள்ள விலங்கு சந்தை ஒன்றிலிருந்து பரவியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. மேலும், வூஹான் வைரலாஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் எனக் கருத்தும் முன் வைக்கப்பட்டது. இது சீனாவுக்குச் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு ஆய்வு நடத்தியது. அதில் வூஹான் வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறப்பட்டது. இது சீனாவுக்கு சற்றே ஆறுதல் அளித்தது.

அமெரிக்க புலாணய்வு துறை
இருப்பினும், கடந்த சில தினங்களாக வூஹான் வைரலாஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்து மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் பைடனும், இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இது கொரோனா தோற்றம் குறித்து முதலில் நிராகரிக்கப்பட்ட வூஹான் வைராலஜி மையம், தற்போது ஏன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.

சந்தேகம் ஏன்
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையே மீண்டும் கொரோனா தோற்றம் பற்றிய சர்ச்சைகளைக் கிளப்பியது. புலனாய்வுத் துறை வெளியிட்ட தகவலில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா ஒத்த அறிகுறிகளுடன் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சீனா முதலில் 2019 டிசம்பர் 31ஆம் தேதி தான் கொரோனா பற்றி உலக சுகாதார அமைப்புக்குத் தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஆய்வுகள்
அமெரிக்காவின் இந்தத் தகவலை வூஹான் ஆய்வு மையம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், வௌவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்தும், அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் ஆய்வுப் பணிகள் வூஹான் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகன வூஹான் வைராலஜி மையத்திற்கு அமெரிக்காவும் நிதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும், வௌவால்களை வைராலஜி மையத்தில் வைத்திருக்கத் தேவையில்லை என்றும் சீனா அப்படி வைத்திருந்தால் அது மிகப் பெரிய தவறு என்றும் அமெரிக்கத் தொற்றுநோய் வல்லுநர் பவுசி தெரிவித்துள்ளார்.

பரவியிருக்கலாம்
அதேபோல உலக சுகாதார மையத்தின் ஆலோசகர் ஜேமி மெட்ஸ்ல், வூஹான் மையத்திலிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார். வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு முன்னரே, தடுப்பூசியைத் தயாரிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் மீது ஆய்வு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அப்போது தவறுதலாக வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது ஒரு விபத்தாக இந்த வைரஸ் வைரலஜி மையத்திலிருந்து பரவியிருக்கலாம் என்பது அவரது கருத்து.

தகவல்கள் என்ன
கொரோனா தோற்றம் குறித்து சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் வூஹான் ஆய்வு மையத்திற்கு மிக அருகில் தான் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல வூஹான் ஆய்வு மையத்தில் ஏற்கனவே, கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இவை வைரஸ் ஆய்வு மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. ஆனால், மறுபுறம். இந்த வைரஸ் முதலில் விலங்கு சந்தையில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸை ஆய்வு செய்தவர்கள் இது இயற்கையாக தோன்றியதைப் போலவே தெரிவதாகக் குறிப்பிட்டனர்.

மீண்டும் ஏற்படலாம்
தற்போது வரை கிடைத்துள்ள தரவுகள் எதுவும் தெளிவாக இல்லை. அதேநேரம் கொரோனா தோற்றம் குறித்து எந்த கருத்தையும் மறுத்தும்விட முடியாது. மேலும், வைரஸ் பரவலின் தோற்றம் குறித்து முழு ஒத்துழைப்பை அளிக்கச் சீனாவும் மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வைரசின் தோற்றம் குறித்து நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மீண்டும் இதேபோல ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications