வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.. பிடிபட்ட ஆப்கானிஸ்தான் நபர் யார்? பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மனுல்லா லக்னவால் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்த நிலையில், என்ன நோக்கத்திற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே பிற்பகல் 2.30 (அமெரிக்க நேரம்) மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில், மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இருவருமே அங்கு இல்லை. உலகின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியான அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடைபெற்று இருக்கக்கூடிய இந்த துப்பாக்கிச்சூடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை உடனடியாக அமெரிக்க பாதுகாப்புப்படை சுற்றிவளைத்தது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அந்த நபரை கைவேலைப்பாடு செய்து, ஆடைகளை களைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் ஏற்றி சென்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று அமெரிக்க சட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், அவரது அடையாளத்தை முழுமையாக உறுதி செய்ய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பிடிபட்ட நபரின் பெயர் ரஹ்மனுல்லா லக்னவால் ஆகும். 29 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோ பைடன் நிர்வாகம் இருந்த போது, ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் ரஹ்மனுல்லா லக்னவால் வந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இவர் தனியாகவே நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பயங்கரவாத செயலாக இருக்க சாத்தியம் உள்ளது என்ற கோணத்தில் எஃப்பிஐ இதை விசாரித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications