Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா கைக்கு செல்லும் கிரீன்லாந்து? நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் என்ன? டிரம்ப் குறிவைப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். கிரீன்லாந்து, அமெரிக்காவுடன் இணையுமா? என்ற கேள்விக்கு நடுவே தான் அங்கு இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நிலவரம் என்ன? கிரீன்லாந்தை அமெரிக்காவால் கைப்பற்ற முடியுமா? இல்லையா? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நாடு டென்மார்க். இந்த நாடு ஜெர்மனி மற்றும் ஸ்வீடனுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அடிக்கடி டென்மார்க் என்பது தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

greenland parliament election 2025 Donald trump us

இதற்கு முக்கிய காரணம் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்து தான். கிரீன்லாந்து என்பது டென்மார்க்கில் இருந்தாலும் கூட அது சுயாட்சி பிரதேசமாக (Autonomous Territory) உள்ளது. கிரீன்லாந்துக்கு என்று தனி பிரதமர் இருக்கிறார். இவர் எடுக்கும் முடிவில் டென்மார்க்கால் தலையிட முடியாது. மேலும் சுயாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்துக்கு டென்மார்க் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மானியமாக நிதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் டென்மார்க்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைப்பற்ற நினைக்கிறார். இதனை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப், ‛‛அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டு குழுவில் உரையாற்றியபோது ஒன்றை உறுதியாக கூறியிருந்தேன். கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத்துக்காக முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருந்தேன். 2ம் உலகப்போரில் இருந்து கிரீன்லாந்தை பாதுகாப்பாக வைத்திருப்பது போல் இனியும் அதற்கான உறுதியை தருவதாக கூறியிருந்தேன். கிரீன்லாந்தில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலரை முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி பணக்காரர்களாக மாற்ற தயாராக இருக்கிறேன். இதனால் அமெரிக்காவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உலகின் பெரிய நாடாக உள்ள அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் டென்மார்க்கை கைப்பற்றுவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இப்படி பரபரப்பான சூழலுக்கு நடுவே தான் டென்மார்க்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெறுகிறது. கிரீன்லாந்தை, கைப்பற்ற டிரம்ப் துடித்து வரும் நிலையில் அங்கு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. கிரீன்லாந்து என்பது டென்மார்க்கை ஒப்பிடும்போதும் 3 மடங்கு அதிக நிலப்பரப்பை கொண்டுள்ளது. ஆனால் மக்கள்தொகை என்பது மிகவும் குறைவு. பெரும்பாலான பகுதிகள் பனி பிரதேசமாக உள்ளன.

இதனால் டென்மார்க்கில் மொத்தம் 57,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இதில் 40,500 பேர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள். கிரீன்லாந்தின் நேரப்படி இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணி) ஓட்டுப்பதிவு தொடங்கி கிரீன்லாந்து நேரப்படி இரவு 10 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு என்பது மார்ச் 12ம் தேதி கிரீன்லாந்து நேரப்படி 1 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணி) வெளியாக உள்ளது. கிரீன்லாந்தை பொறுத்தவரை மொத்தம் மொத்தம் 31 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

கிரீன்லாந்தில் இங்கு பல கட்சிகள் இருந்தாலும் 2 கட்சிகள் தான் பெரிய கட்சிகளாக உள்ளன. ஒன்று Inuit Ataqatigiit. இது இப்போது கிரீன்லாந்தில் ஆளும் கட்சியாக உள்ளது. இதன் தலைவர் பவுரூப் எகேட் தான் பிரதமராக உள்ளார். இந்த கட்சிக்கு தற்போது 11 எம்பிக்கள் உள்ளன. மற்றொரு கட்சியின் பெயர் Siumut. இவர்கள் 2 பேரும் கூட்டணி அமைத்து ஆட்சியை கடத்தி வருகின்றன. இந்த கட்சிக்கு 10 எம்பிக்கள் உள்ளன. தற்போது இந்த 2 கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது.

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த 2 கட்சிகள் போட்டியிடுகின்றன. இதுதவிர Nalerag, Demokrattit, Atassut, Qulleq உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கி உள்ளன. இந்த கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் தேர்தலை எதிர்கொள்கின்றன. அது என்னவென்றால் டென்மார்க்கில் இருந்து கிரீன்லாந்தை தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று கருத்து அவர்களிடம் உள்ளது. அதேவேளையில் எந்த காரணம் கொண்டும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இருப்பினும் டென்மார்க்கில் இருந்து கிரீன்லாந்து வெளியேறினால் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. டென்மார்க்கை விட்டுவிட்டு தனிநாடாக செயல்பட வேண்டும் என்பது தான் கிரீன்லாந்து மக்கள் மற்றும் அந்த நாட்டின் அரசியல்வாதிகளின் நோக்கமாக உள்ளது.

இருப்பினும் ஒரு பெரிய பிரச்சனை என்பது உள்ளது. அதாவது தற்போது கிரீன்லாந்து சுயாட்சி பிரதேசமாக இருந்தாலும் கூட டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதனால் டென்மார்க் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிரீன்லாந்துக்கு 1 பில்லியன் அமெரிக்கா டாலர் என்பது மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை கிரீன்லாந்து தனி நாடாக மாறினால் அந்த மானிய நிதி என்பது கிடைக்காது. இது கிரீன்லாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு மாற்று வருவாயை கிரீன்லாந்து தேட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் கிரீன்லாந்து சிக்கலாம்.

இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகிறார். கிரீன்லாந்து என்பது பனிப்பிரதேசமாக இருந்தாலும் கூட அங்கு கனிமவளங்கள் உள்ளன. அதேபோல் ஐரோப்பா பிராந்தியத்தில் இந்த கிரீன்லாந்து உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்கு கிரீன்லாந்தை அமெரிக்காவால் பயன்படுத்த முடியும்.

இதுபோன்ற காரணங்களால் தான் டிரம்ப், கிரீன்லாந்தை குறிவைத்துள்ளார். ஆனால் டிரம்ப் கனவை பலிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதில் கிரீன்லாந்து அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர். இதனால் இந்த தேர்தல் முடிவு எப்படி வருகிறது? தேர்தலுக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கிறார்? கிரீன்லாந்தை கைப்பற்ற நேரடியாக போர் தொடுக்கிறாரா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு விடை காண நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+