எப்போதும் இஸ்ரோ தானே அனுப்பும்.. ஜிசாட் சாட்டிலைட் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது ஏன்?
வாஷிங்டன்: இஸ்ரோ நாட்டின் அதிநவீன ஜிசாட்-என் 2 சாட்டிலைட் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு ஸ்பேஎஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தனது சாட்டிலைட்களை மட்டுமின்றி இஸ்ரோ பல நாடுகளின் சாட்டிலைட்களை விண்ணில் செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது. அப்படியிருக்கும் போது இஸ்ரோ நிறுவனம் திடீரென ஸ்பேஸ் எக்ஸ் உதவியை நாட என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்திய நேரப்படி நேற்றிரவு இஸ்ரோவின் ஜிசாட்-என் 2 சாட்டிலைட்டை எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஎஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கனாவெரல் மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரோவின் சாட்டிலைட் ஒன்றை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.
GSAT-N2 என்றால் என்ன: ஜிசாட் என் 2 (GSAT-N2) என்பது இஸ்ரோவின் செயற்கைக்கோள் மையம் மற்றும் திரவ உந்துவிசை அமைப்பு மையம் ஆகியவை இணைந்து உருவாக்கிய ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த ஒரு சாட்டிலைட் உடன் நின்றுவிடாது. ஜிசாட் வரிசையில் பல சாட்டிலைட்கள் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசு சார்பில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்க இந்த ஜிசாட் சாட்டிலைட்கள் உதவும்.
இந்த சாட்டிலைட்டால் 48 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா டிரான்ஸ்மிஷனை செய்ய முடியும். இதன் மூலம் சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைகளையும் நாட்டில் கிடைக்கும். குறிப்பாக, விமானத்தில் செல்வோர் எளிதாக இணையச் சேவையைப் பயன்படுத்த இது முக்கியமாக உதவும்.. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிராட்பேண்ட் சேவைகளின் செயல்திறனையும் கவரேஜையும் மேம்படுத்த இந்த ஜிசாட் என் 2 சாட்டிலைட் உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
என்ன காரணம்: இதைப் பார்க்கும் போது இஸ்ரோ சாட்டிலைட்டை ஏன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் அனுப்புகிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் வரும். ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரோ பல சாட்டிலைட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. பல உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவிற்கே வருகிறார்கள். அப்படியிருக்கும் போது இஸ்ரோ ஏன் தனது சாட்டிலைட்டை அனுப்ப ஸ்பேஸ் எகஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது என்ற கேள்வி வரும்.
ஜிசாட் சாட்டிலைட்டின் எடையே அதற்குக் காரணமாகும். இதன் எடை சுமார் 4700 கிலோவாகும். இஸ்ரோவின் எந்தவொரு ராக்கெட்டாலும் இந்தளவுக்கு எடையைத் தூக்கிச் செல்ல முடியாது. தற்போது இந்தியாவின் அதிநவீன ராக்கெட்டாக இருக்கும் எல்விஎம் 3 ராக்கெட்டால் கூட அதிகபட்சமாக 4000 கிலோ எடையை மட்டுமே சுமந்து செல்ல முடியும். இதன் காரணமாகவே வெளிநாடுகளின் உதவிகளை இஸ்ரோ நாடும்.
ஸ்பேஸ் எக்ஸ்: அதுவும் பொதுவாக பிரான்ஸ் நாட்டின் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனம் மூலமாகவே இந்தியா தனது அதிக எடை கொண்ட சாட்டிலைட்களை அனுப்பும். ஆனால், இப்போது ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்திடமும் இதற்குத் தேவையான ராக்கெட்கள் இல்லை. மேலும், ரஷ்யா- உக்ரைன் மோதலும் அங்குப் பிராந்தியத்தில் குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட்டது.
பால்கன் 9: எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வலிமையான ராக்கெட்களில் ஒன்று தான் இந்த பால்கன் 9.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மற்ற ராக்கெட்களை போலவே இதையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த பால்கன் 9 ராக்கெட் மூலம் சாட்டிலைட்களை பூமியின் சுற்றுப்பாதையில் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications