உலகமே முடங்கும்? சைலன்டாக பூமியை தாக்கிய சூரிய புயல்! குழம்பிய ஆய்வாளர்கள்! அன்றே சொன்ன பாபா வாங்கா
வாஷிங்டன்: நமது பூமியைக் கடந்த வெள்ளிக்கிழமை மிக மோசமான ஒரு சூரிய புயலைத் தாக்கியுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் இதுபோன்ற புயல் வரும் என்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அமைதியாக வந்து இது தாக்கியுள்ளது.
நமது பூமி சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். பூமியில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் சூரியனும் அதில் இருந்து வரும் சூரிய கதிர்களும் தான் ஆதாரமாக இதுவரை இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாகச் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்தே வருகின்றனர். சூரியனில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கூட இங்கே நமக்குப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சூரிய புயல்
இதற்கிடையே கடந்த மார்ச் 24ஆம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை, நமது பூமி மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயலால் தாக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இதுபோல சூரிய புயல் தாக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும், இது மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயலாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேசிய வளிமண்டல நிர்வாகம் (NOAA) இந்த புவி காந்த புயலால் G4 தீவிரதன்மையில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சூரிய புயலுக்கு வழங்கப்படும் இரண்டாவது உச்சபட்ச கிரேட் இதுவாகும்.

மோசமான பாதிப்பு
இத்தகையே G4 தரச் சூரியப் புயல் என்பது மின் கட்டமைப்பில் பரவலான மின்னழுத்த சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் நமது மின்சார கட்டமைப்பில் பெரிய சேதம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற புவி காந்தப் புயல், பூமியில் மட்டுமில்லாமல் விண்வெளி செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். கண்காணிப்பு உள்ளிட்ட பல வித பாதிப்புகளை இது ஏற்படுத்தும். இந்த சூரிய புயல் காரணமாக ராக்கெட் லேப் தனது ராக்கெட்டை 90 நிமிடங்கள் தாமதமாக ஏவும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.

பாதுகாக்கும்
புவி காந்த புயல் என்பது சூரியனில் இருந்து ஏற்படுகிறது. இது பூமியின் காந்தப்புலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதே இதை மிக மோசமான ஒன்றாக மாற்றுகிறது. சூரியனின் கரோனல் மாஸ் எஜெக்ஷன் அல்லது அதிவேக சூரிய ஓட்டம் நமது கிரகத்தை அடையும் போது, அது காந்த மண்டலத்தில் மோதுகிறது. பூமியின் காந்த மண்டலம் என்பது காந்தப்புலங்களால் உருவாக்கப்பட்டது.. பொதுவாக இவை தான் சூரியனால் உமிழப்படும் துகள்களிலிருந்து பூமியை முற்றிலுமாக பாதுகாக்கிறது.

ஆபத்து
இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன் அல்லது அதிவேக ஸ்ட்ரீம் பூமியை வந்தடையும் போது, அது பூமியின் காந்த மண்டலத்தை அப்படியே பிளக்கிறது. இது அதிக சக்தி கொண்ட சூரியக் காற்றின் துகள்கள் நமது துருவங்களுக்கு மேல் வளிமண்டலத்தைத் தாக்க அனுமதிக்கிறது. இது போன்ற சூரிய நிகழ்வுகள் அரோராக்களை சூப்பர்சார்ஜ் செய்யலாம். இதனால் பாதிப்புகள் மோசமாக இருக்கும் ஆபத்தும் இருக்கிறது.

ஆய்வாளர்கள்
இப்போது நம்மைத் தாக்கிய இந்த சூரிய புயலை ஆய்வாளர்கள் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "கண்ணுக்குத் தெரியாத இந்த புயல், வழக்கமான சூரிய புயலைக் காட்டிலும் மிக மெதுவாகவே கிளம்பத் தொடங்குகிறது. இதனால் சிறப்புச் சூரியனின் மேற்பரப்பை விட்டு இந்த துகள்கள் கண்டறிவது மிகவும் கடினமாகிறது. வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறிய தீர வேண்டும்" என்றார். இந்த சூரிய புயலை ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை என்றாலும் கூட பாபா வாங்கா இதைத் துல்லியமாகக் கணித்திருந்தார்.

பாபா வாங்கா
பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. பாபா வாங்கா என்று அழைக்கப்படும் இவர், அப்போதே, வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்று கணித்துள்ளார். இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது எனப் பல விஷயங்களை இவர் கணித்துள்ளார். 2023இல் சூரிய புயல் ஏற்படும் என்று அவர் அப்போத கணித்த நிலையில், அது உண்மையாகி வருகிறது. இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications