Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90 நாட்கள் பிடித்து வைத்திருந்தார்கள்.. ஏலியன்கள் சொன்னது இதுதான்.. அமெரிக்க முன்னாள் அதிகாரி பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இரண்டு வேற்று கிரகவாசிகளை நான் பார்த்தேன். அவர்களின் பறக்கும் தட்டுக்களில் 3 மாதங்கள் இருந்தேன் என்று அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் பைலட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற அலெக்ஸ் கொல்லியர் என்பவர் சொல்லியிருக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தில் மனிதனைப் போலவே வேறு கிரகத்திலும் உயிர்கள் வாழ சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் பலரும் நம்புகிறார்கள். அதே வேளையில், வேறு எந்த கிரகங்களிலும் உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை என்ற கருத்து மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படி விஞ்ஞானிகள் மத்தியிலே இருவேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் நாசா சத்தமில்லாமல் வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வை மெற்கொண்டு வருவது ஊரறிந்ததே.

 Will find ancient alien ruins in universe soon says Ex-US pilot

அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும் அதை பார்த்ததாகவும் திடீரென்று சிலர் திகில் கிளப்புவார்கள். இன்று வரை யுஎப்ஓ, ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். அதே நேரத்தில் பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் விண்வெளி துறையில் மேற்கொண்டு வருகின்றன.

3 மாதங்கள் இருந்ததாக: கன்னித்தீவு கதை போல ஏலியன்கள் குறித்த இந்த ஆய்வும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க அவ்வப்போது திடீரென ஏலியன்கள் தூக்கிட்டு போனதாகவும் நேரில் பார்த்ததாகவும் சிலர் பீதி கிளப்புவார்கள். அந்த வகையில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் பைலட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற அலெக்ஸ் கொல்லியர் என்பவரும் இப்படியான ஒரு கதையை சொல்லியிருந்தார்.

அதாவது சிறு வயதில் தன்னை ஏலியன்கள் தூக்கிச்சென்றதாகவும் அவர்களின் கட்டுப்பாடில் 3 மாதங்கள் இருந்ததாகவும் கூறியிருந்தார் அலெக்ஸ் கெல்லியர். 1960களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் இரண்டு ஏலியன்களிடம் தான் பேசியதாகவும் ஏலியன்களிடம் பேசுவதற்காகவே தனக்கு ஸ்பெஷல் பெல்ட் ஒன்று அணிவிக்கப்பட்டதாகவும் கூறிய அலகெஸ், தனது தாத்தாவின் இல்லத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது ஏலியன்கள் தூக்கி சென்றதாக கூறியிருந்தார்.

அட்வான்ஸ்டு டெக்னாலஜி: அதாவது, தூக்கத்தில் இருந்து விழித்த போது ஒரு இருட்டறையில் கிடந்ததாகவும் அங்கு விசாசுயேஸ் மற்றும் மோரோனேய் என்ற இரண்டு வேற்று கிரகவாசிகளை நான் பார்த்தேன். அவர்களின் பறக்கும் தட்டுக்களில் 3 மாதங்கள் இருந்தேன். இதை பூமியின் நேரத்தில் ஒப்பிட்டால் வெறும் 18 நிமிடங்கள்தான். அப்போது வேற்றுகிரகவாசிகள் சொன்ன விஷயம் என்னவென்றால்.. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மட்டுமே இல்லை.. பல கிரகங்களில் ஏலியன்கள் வசிக்கிறார்கள் என்றனர்.

நான் ஆண்ட்ரோமெடியன்ஸ் என்ற அந்த இரு வேற்றுக்கிரகவாசிகளிடம் மனிதர்கள் எந்த அளவிற்கு டெக்னாலஜியில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அமெரிக்க ராணுவம் நினைப்பதை விட 400 வருடங்கள் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை கொண்டு இருப்பதாக கூறினார்கள் என்றார். மேலும் விரைவில் மனிதர்கள் ஏலியன்கள் எச்சங்கள் அதாவது ஏலியன்கள் இருப்பதற்கான சான்றுகளை கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+