ஆடம்பரத்தின் உச்சம்! 20 தளம், டைட்டானிக்கை விட பல மடங்கு பெரிய கப்பல்.. கட்டணம் எவ்வளவு?
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான Icon of the Seas - இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. மிதக்கும் நட்சத்திர விடுதி என்று சொல்லும் அளவுக்கு இந்தக் கப்பல் எண்ணற்ற வசதிகள் உள்ளன. இதனை இங்கே பார்க்கலாம்.
ஆடம்பர சொகுசு கப்பல் என்றாலே நம் நினைவுக்கு வருவது டைட்டானிக் கப்பல்தான். சொகுசு வசதிகள் பலவும் நிறைந்த இந்த ஆடம்பர கப்பல் தனது முதல் பயணத்திலேயே விபத்தில் சிக்கியது. டைட்டானிக் கப்பல் குறித்து எடுக்கப்பட்ட படமும் பெரும் வெற்றி பெற்றது. மக்களுக்கு இந்த கப்பல் மீதான ஆர்வம் பல ஆண்டுகள் ஆனாலும் குறையவில்லை.

கடந்த 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்து நடைபெற்றாலும் அதற்கு பிறகு பல தலைமுறைகள் தற்போது கடந்துவிட்டாலும் சொகுசு கப்பல் என்றால் உடனே மக்கள் மனதிற்கு நினைவுக்கு வருவது டைட்டானிக் கப்பல்தான். ஆனால், தற்போது டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதாகவும் ஆடம்பரத்தின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு பல வசதிகளை கொண்ட கப்பல் ஒன்று தனது முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறது.
இந்த கப்பல் குறித்த விஷயங்களையும் கப்பலில் இருக்கும் வசதிகள் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிறுவனம் ராயலர் கரிபியன். இந்த நிறுவனம் மிகப்பிரமாண்டமான கப்பல் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இயற்கை திரவ எரிவாயுவின் மூலம் இயங்க கூடிய உலகின் முதல் கப்பல் என்ற பெருமையை இந்தக் கப்பல் பெற்றது.

பிரமாண்ட இந்தக் கப்பலின் மொத்த எடை 2.5 லட்சம் டன். 1,200 அடி நீளம் கொண்டது. உலகின் மிகப்பெரிய கப்பல் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பலே 882.9 அடி நீளம், 46,328 டன் எடை கொண்டதாகும். டைட்டானிக் கப்பலை விட பல மடங்கு பெரியதான இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. மிதக்கும் ஆடம்பர விடுதி என்று என சொல்லும் அளவுக்கு இந்தக் கப்பலில் வசதிகள் நிறைந்துள்ளன.
20 தளங்களை கொண்ட இந்தக் கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 6 நீர் சறுக்குகள், தியேட்டர் என ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்தும் உள்ளன. இந்தக் கப்பலில் மொத்தம் 7,600 பேர் பயணிக்க முடியும். கப்பலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2,350 ஆகும். இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் இருந்து புறப்பட்டு 7 நாட்கள் தொடர்ச்சியாக பயணிக்கிறது.

வெப்ப மண்டல தீவுகளை சுற்றி ஒருவாரம் இந்தக் கப்பல் பயணிக்க உள்ளது. இந்தக் கப்பலில் பயணிக்க 1,800 டாலர் டூ 2,200 டாலர் வரை கட்டணமாகும். இந்திய மதிப்பில் சொல்வது என்றால் ஏழு நாள் பயணத்திற்கு ரூ.1.5 லட்சத்தில் இருந்து 1.83 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணிகளை கவரும் விதமாக பல வசதிகள் உள்ளன. நேரடி இசை நிகழ்ச்சிகள், ஷோக்கள், ஆகியவையும் நடத்தப்படும்.
இந்தக் கப்பல் கட்டுமான பணி 900 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. பின்லாந்தில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கப்பல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1912 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் விபத்தில் சிக்கிய டைடானிக் கப்பலில் நீளம் 852 அடியும் எடை 46,329 டன்கள் ஆகும். டைட்டானிக்கை விட பல மடங்கு பெரிதான இந்தக் கப்பல் பயணிகளுக்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications