அடுத்த கொரோனா? பறவை காய்ச்சலால் முதல் உயிரிழப்பு! உறுதி செய்த WHO- மனிதர்களிடையே எப்படி பரவும்?
வாஷிங்டன்: இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாகப் பறவை காய்ச்சல் காரணமாக மனிதர்களிடையே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் முதலில் பரவிய கொரோனா பாதிப்பு அதன் பிறகு எந்தளவுக்கு ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.

உலக வல்லரசான அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு நிலைமை சீராகவே பல ஆண்டுகள் ஆனது.
அலற வைத்த கொரோனா: கொரோனா ஏற்படுத்திய பாதிப்பையும் இழப்பையும் மக்கள் இதுவரை மறக்கவில்லை. இதன் காரணமாகவே இப்போது புதுவித வைரஸ் பாதிப்பு குறித்து எதாவது தகவல் வெளியானால், அது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உலகில் முதல்முறையாகப் பறவை காய்ச்சல் மனிதர்களிடையே முதல் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
கடந்த ஏப்ரல் மாதம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் மெக்சிகோவில் உயிரிழந்துள்ளார்.. அதேநேரம் வைரஸ் பாதிப்பு எப்படி அந்த நபருக்குப் பரவியது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு: அதேநேரம் கொரோனா அளவுக்கு இது மோசமான ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் இதன் ஆபத்து குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
59 வயதான அந்த நபர் மெக்சிகோ நகரில் வசித்து வந்தார். அவருக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "இந்த பாதிப்பு அந்த நபருக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.. இருப்பினும், மெக்சிகோவில் கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் A(H5N2) பதிவாகி இருந்தது" என்றார்.
முதல்முறை: பறவை காய்ச்சல் இதுவரை பறவைகளிடையே மட்டுமே பரவி வந்தது. அது மனிதர்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்துவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவிலும் கோழிப் பண்ணைகளில் வேலை செய்து வந்த 3 பேருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட போதிலும் அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.
மெக்சிகோ சுகாதாரத் துறையும் இது தொடர்பாக ஆய்வு செய்தது. இருப்பினும், அவர்களாலும் எப்படி அந்த நபருக்குப் பறவை காய்ச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லையாம். பாதிக்கப்பட்ட அந்த நபர் கோழி உட்பட எந்தவொரு விலங்குகள் உடனும் நேரடி தொடர்பில் இல்லை. அதேநேரம் அவருக்கு ஏற்கனவே கிட்னி பாதிப்பு, நீரிழிவு நோய் எனப் பல இணை நோய்கள் இருந்துள்ளன. இதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அச்சம் ஏன்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பறவை காய்ச்சல் மனிதர்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்துவது இதுவே முதல்முறையாகும். மேலும், இப்போது வரை இது பாதிக்கப்பட்ட பறவைகளில் இருந்தே மனிதர்களை தாக்கி இருக்கிறது. ஆனால் இது மனிதர்களிடையே பரவுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை. அதேநேரம் ஒருவேளை இது மனிதர்களிடையே பரவ தொடங்கினால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications