சுழற்றியடிக்கும் கொரோனா சுனாமி -16.18 கோடி பேர் பாதிப்பு - 33.58 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,18,24,477 பேராக அதிகரித்துள்ளது.கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 14,06,53,454 பேர் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: கொரோனா இரண்டாவது அலை உலக நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 743,191 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,18,24,477 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,06,53,454 பேர் குணமடைந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உலகம் முழுவதும் ஒரே நாளில் 13,374 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 33,58,489 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 17,80,9,981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 104,231 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு 3,36,26,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,66,67,199 பேர் குணமடைந்துள்ளனர்.
5,98,540 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 343,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,46,120 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,999 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 262,350 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் 1,54,36,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,39,79,329 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 430,596 நாடு முழுவதும் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவிற்கு 58,41,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 107,250 பேர் மரணமடைந்துள்ளனர். 49,99,210 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications