அது அப்பா இல்லை.. பாய் பிரெண்ட்! வயசானவங்க கிட்டதான் "அந்த" பிரச்னை இருக்காது! வெட்கப்படும் இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 26 வயதான பெண் எப்போதும் அவரை தன்னை விட 26 வயது மூத்த ஒரு பெண்ணின் காதலன், அந்நியர்களால் அவளது அப்பா என்று அடிக்கடி தவறாக நினைக்கப்படுகிறான்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த இளம் பெண் க்ளோ கேன்டர்பரி. 26 வயதாகும் இவர் தனது காதலருடன் எங்கே வெளியே சென்றாலும் ஒரே குழப்பம் தான்!

ஏனென்றால் அவரை விட அவரது காதலருக்கு 26 வயது அதிகம். ஆம், இது தான் அந்த ஜோடிக்கு இருக்கும் பிரச்சினை.

 அமெரிக்கா

அமெரிக்கா

இளம் பெண் க்ளோ கேன்டர்பரிவின் நண்பர் ஒருவர் மூலம் எரிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 52 வயதான எரிக் அன்புடன் க்ளோ கேன்டர்பரியை கவனித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையேயான அன்பு விரைவில் காதலாக மாறிவிட்டது. இருவரும் இப்போது சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருவதாக வெட்கத்துடன் கூறுகிறார் க்ளோ கேன்டர்பரி!

காதலர்

காதலர்

இருவரும் வெளியே செல்லும் போதெல்லாம் பலரும் தனது காதலர் எரிக்கை அப்பா என்று நினைத்துக் கொள்வதாகவும் இதனால் ஒவ்வொரு முறையும் தாங்கள் காதலர்கள் என்று முன்கூட்டியே சொல்ல வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனக்கு எப்போதும் வயதானவர்களைக் காதலிப்பது தான் பிடிக்கும் என்றும் வயதானவர்களைப் பார்க்கும் போது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிடிக்கும்

பிடிக்கும்

அவர் மேலும் கூறுகையில், "நான் எனது வயதைத் தாண்டி முதிர்ச்சி அடைந்துள்ளேன். இதனால் எனக்கு வயதானவர்களைக் கண்டால் தான் ஈர்ப்பு ஏற்படுகிறது. வயதான நபருடன் நான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது இது முதல் முறை இல்லை. சொல்லப்போனால் எனக்கு இதுபோல வயதான நபர்களுடன் உறவில் இருப்பது தான் பிடிக்கும். ஏனென்றால் எனது சொந்த வயதினருடன் டேட்டிங் செய்வதால் அவர்கள் செய்யும் டிராமாக்களை சமாளிக்க என்னால் முடியாது.

 வயதான டேட்டிங்

வயதான டேட்டிங்

வயதான நபர்களை டேட்டிங் செய்யும் போது, அவர்கள் மன ரீதியாக முதிர்ச்சி அடைந்தவர்களாக உள்ளனர். அவர்களைச் சமாளிப்பதும் எளிது. எரிக் உடன் வெளியே செல்லும் போது பலரும் அவரை என் அப்பா என்று நினைத்துவிடுகிறார்கள். கடந்த முறை நான் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்தபோதும் இதே நிலை தான். ஒவ்வொரு முறையும் எரிக் என் அப்பா இல்லை காதலன் என்று சொல்வதே எனக்கு ஒரு வேலையாக உள்ளது.

 எப்படி பழகினோம்

எப்படி பழகினோம்

அவர்கள் வேண்டுமென்றே கேட்பதில்லை.. அவர்களுக்கு உண்மை தெரியாது. அதனால் இது என்னைக் காயப்படுத்துவது இல்லை. இருவரும் முதலில் சந்தித்த போது நான் வேறு ஒருவருடன் உறவில் இருந்தேன். ஆரம்பத்தில் எனக்கு எரிக்கை பார்த்ததும் காதல் ஏற்படவில்லை. எனக்கு 3 வயதில் ஒரு சிறுமி உள்ளார். எரிக்கிற்கு 4 வயதில் சிறுமி உள்ளார். அவர்களை ஒன்றாக விளையாட அழைத்துச் செல்வோம். அப்போது தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

குடும்பம்

குடும்பம்

எனது வயதில் இருக்கும் மற்ற பெண்களைக் காட்டிலும் நான் மன ரீதியாக நன்கு முதிர்ச்சி அடைந்துவிட்டேன். எனவே, வயதானவர்கள் உடன் உறவில் இருப்பது தான் எனக்குப் பிடித்து இருக்கிறது. இதற்கு மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் கவலை இல்லை. நாங்கள் இருவரும் குழந்தை பெற்றெடுத்துக் கொள்ளவும் விரும்புகிறோம். எரிக்கிற்கு 4 வயதுக் குழந்தை மட்டுமின்றி 18 வயதிலும் பெண் ஒருவர் உள்ளார். அவர் உடனும் எனக்கு நல்லதொரு உறவு உள்ளது.

 என்ன எனர்ஜி

என்ன எனர்ஜி

அவர் தனது குழந்தைகளை எப்படி வளர்த்துள்ளார் என்பதே அவரது கேரக்டரை உணர்த்துவதாக இருந்தது. 52 வயதானாலும் கூட எரிக் எப்போதும் எனர்ஜி உடன் இருப்பார். நாங்கள் பார்ட்டி செய்யும் போது, அவரது எனர்ஜியை பார்த்தால் அவர் என்னை விடச் சின்ன பையனோ என்று கூட எனக்கு சில சமயம் தோன்றும்.

 கவலை இல்லை

கவலை இல்லை

நான் முதலில் வயதான நபருடன் உறவில் இருக்கும் போது, அது யாருக்கும் தெரியாது. வெளியே சொன்னால் என்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனச் சொல்லாமல் இருந்தேன். ஆனால், எரிக்கை பார்த்தும் அந்த அச்சம் எல்லாம் இல்லை.. மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன? இப்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+