குழந்தைகளுக்கு பெரிய ஆபத்து! காரின் உள்ளே சுவாசித்தால் கேன்சர்! ஆண்களுக்கும் ஆண்மை குறைவு ஏற்படலாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: காரின் உள்ளே இருக்கும் போது பொதுமக்கள் கேன்சரை ஏற்படுத்தும் ஒரு வித கெமிக்கலை சுவாசிப்பதாக பகீர் ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.

இந்தக் காலத்தில் கார் என்பது உயர் வர்க்கத்தினரைத் தாண்டி மிடில் கிளாஸ் மக்களுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குடும்பத்தில் 4 பேர் இருந்தால் சவுகரியமாகச் செல்ல கார் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

Your car might cause cancer for your kids as Cancer-Causing Chemicals found in Cars

இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்களை வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், டூ வீலரை காட்டிலும் கார்கள் சற்று பாதுகாப்பாகவும் இருக்கிறது.

கார்கள்: சாலைகளில் பயணிக்க வேண்டுமானாலும் கார்கள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கார்களால் வேறு முக்கிய பாதிப்பு ஏற்படுகிறதாம். இது தொடர்பாக பகீர் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.. அதாவது பொதுமக்கள் தங்கள் காரில் இருக்கும்போது புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்களை சுவாசிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சயின்ஸ் & தொழில்நுட்ப ஆய்விதழில் இது குறித்த விரிவான ரிப்போர்ட்டை வெளியிட்டு உள்ளது. அதில் உலகெங்கும் 2015 முதல் 2022 வரை வெளியான 101 கார் மாடல்களில் இருந்த கேபின் காற்றை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். மின்சார கார், சிஎன்ஜி கார், ஹைபிரிட் கார் என்று மூன்று வகை மாடல்களையும் ஆய்வு செய்துள்ளனர்.

ஆண்மை குறைவு: அதில் 99% கார்களில் TCIPP எனப்படும் ஃபிளேம் ரிடார்டன்ட் (flame retardant) இருப்பது கண்டறியப்பட்டது. இந்த TCIPP கேன்சரை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கார்களில் TDCIPP மட்டுமின்றி TCEP என்ற ஃபிளேம் ரிடார்டன்ட்டும் இருந்துள்ளது. அவை புற்றுநோயை மட்டுமின்றி நரம்பியல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறதும். இது மட்டுமின்றி ஆண்களிடையே இவை ஆண்மை குறைவு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

குழந்தைகளுக்குப் பாதிப்பு மோசம்: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "சராசரியாக ஒரு ஓட்டுநர் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணி நேரம் காரில் இருப்பதாக எடுத்துக் கொண்டாலே அது உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் கார் ஓட்டுபவர்களுக்கு இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.. அதேபோல குழந்தைகள் பயணித்தால் அவர்களுக்குப் பாதிப்பு அதீதமாகவே இருக்கும். ஏனென்றால் பொதுவாகவே பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அதிக காற்றைச் சுவாசிப்பார்கள். இதனால் அவர்களுக்குப் பாதிப்பும் அதிகமாக இருக்கும்" என்கிறார்கள்.

கோடைக் காலம்: குறிப்பாகக் கோடைக் காலத்தில் காரில் இருந்து வெளிவரும் ரசாயனங்கள் அதிகரிப்பதால் சம்மரில் இந்த பாதிப்பு மோசமாகிறது.. காரில் பயன்படுத்தப்படும் சீட்களில் இருந்து தான் இந்த கேன்சரை ஏற்படுத்தும் நச்சு வாயுக்கள் வெளியேறுகிறதாம். இந்த சீட்கள் எளிதாகத் தீப்பற்றக்கூடாது என்பதை இதை செய்கிறார்கள். இருப்பினும். அந்த கெமிக்கலை சேர்த்தால் தீ எளிதாகப் பற்றாது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இது தீயணைப்பு வீரர்களையும் கூட ஆபத்தில் தள்ளுகிறதாம். அதாவது காரில் எதாவது தீ விபத்து ஏற்படும் போது, காப்பாற்றத் தீயணைப்பு வீரர்கள் சென்றால் அவர்களும் இந்த ஆபத்தான கெமிக்கல்களை சுவாசிக்க வேண்டி இருக்கிறதாம். இதனால் காரில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் அளவு குறைக்க வேண்டும் அல்லது இது தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்க வேண்டும் என்று தீயணைப்பு வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+