முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்? ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் முத்தரப்பு மீட்டிங்!
வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர்ந்தால் தங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நினைத்த ரஷ்ய அதிபர், உக்ரைனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா போர்
ஆனால், இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்ததால் அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. குட்டி நாடான உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட்ட புதினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்ததால் ரஷ்யாவை ஒரு கை பார்த்துவிட்டது உக்ரைன்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரால் உலக அளவில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஒருபக்கம் என்றால், ஆயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளன. உக்ரைனில் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றினாலும் எதிர்பார்த்த வெற்றி அந்த நாட்டிற்கு கிடைக்கவில்லை.
போரை முடிக்க போராடும் டிரம்ப்
கன்னித்தீவு போல தொடர் கதையாக நீண்டு கொண்டு இருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன் என அவ்வப்போது சுய தம்பட்டம் அடித்துவரும் டிரம்பால் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. புதின், ஜெலன்ஸ்கியை அவ்வப்போது டிரம்ப் சந்தித்து போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இரு நாடுகளும் ஏதாவது ஒரு குறையை சொல்லி போரை இழுத்துக்கொண்டே செல்கின்றன.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக நாளை (வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அமெரிக்கா - உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக வர்த்தக மன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிறகு நடைபெற்ற குழு ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், இதுபோன்ற ஒரு சந்திப்பு நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
போர் முடிவுக்கு வருமா?
போரை இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எந்த பேச்சுவார்த்தையுமே இல்லாமல் இருப்பதற்கு இது சிறந்ததுதான்" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து பேசிய ஜெலன்ஸ்கி, இந்த சந்திப்பு முடிந்த உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
ஜெலன்ஸ்கி இது தொடர்பாக கூறுகையில், "எங்கள் பிரதிநிதிகள் அமெரிக்கர்களை இன்று சந்தித்தனர். நாளை ரஷ்ய பிரதிநிதிகளை அமெரிக்கா சந்திக்கிறது. புதின் இப்போது தூங்கிக் கொண்டு இருப்பார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது" என்றார்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications