மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் குறைவு.. உண்மையில் என்ன காரணம்! வெளிப்படையாக பேசிய நிர்மலா சீதாராமன்
சென்னை: மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நியமனம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிர்மலா சீதாராமன்: இதில் பேசிய நிர்மலா சீதாராமன், "கடந்தாண்டு அக். மாதம் முதல் இந்திய அரசில் ஒவ்வொரு துறையிலும் உள்ள காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். ரோஸ்கர் மேளா திட்டத்தின் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை தர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக். முதல் தொடர்ச்சியாக இதைச் செய்து வருகிறோம். இப்போது நாட்டில் 51 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம்.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் இந்த நிகழ்வு நடந்தது. இதேபோல இந்தியா முழுக்க பல மாநிலங்களில் பல இடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வேலை கிடைக்கிறது.
தமிழர்களுக்கு வேலை: இங்கே நான் ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த மேளாவில் உயர் அதிகாரிகள் தொடங்கி ஊழியர்கள் வரை அனைத்து பணிகளிலும் காலியிடங்கள் இருக்கிறது. அனைத்து பணியிடங்களை நிரப்பி வருகிறோம். இதில் க்ளர்க், ப்யூன் உள்ளிட்ட பணிகளுக்கும் ஆட்களை எடுத்து வருகிறோம். இந்த பணிகளில் தமிழ்நாட்டில் ஒரு 100 இடங்கள் காலியாக இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு 300 பேர் விண்ணப்பித்திருந்தால்.. அவர்களில் 100 பேருக்கு வேலை கிடைக்கும். 300 பேர் விண்ணப்பிக்கவில்லை என்றால் குறைந்தது 200 அல்லது 150 பேர் விண்ணப்பித்தால் கூட ஓகே.. ஆனால், 100 பேர் அல்லது அதற்குக் குறைவான நபர்கள் விண்ணப்பித்தால் அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி கிடைக்கும். மற்ற 30, 40 இடங்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே செல்லும்.
பணியிடங்கள்: வங்கி போன்ற இடங்களில் மக்களுடன் தொடர்பு கொள்ளும் கிளார்க் போன்ற பணியிடங்களில் தமிழர்கள் இல்லை என்கிறார்கள். அது நியாயமான கோரிக்கை. இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால், அந்த பிரச்சினைக்கு இதுதான் காரணம் அதைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மத்திய அரசுப் பணிகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பித்தால் தான் தமிழர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைகளில் கிடைக்கும் 60 பேருக்கு மட்டும் வேலை தந்துவிட்டு, மற்ற இடங்களை காலியாக வைக்க முடியாது. எனவே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அங்கு நியமிக்க வேண்டி இருக்கிறது.
உள்ளூர் மொழிகள்: அவர்களையும் அந்தந்த மாநில மொழிகளை கற்றுக் கொள்ளச் சொல்கிறோம். உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ள சில காலம் ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சேவையில் குறைபாடு ஏற்படுகிறது. ஏன் அதிக இடங்களில் தமிழர்களைப் பணி அமர்த்தவில்லை என்றால் தமிழர்கள் அதிகம் அப்ளை செய்வதில்லை. அதுவே காரணம்.
எனவே, இங்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் இருக்கும் வேலைகள் முழுவதும் தமிழர்களுக்குக் கிடைக்கும். இது மட்டுமே காரணம் எனச் சொல்லவில்லை. இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்கிறேன். இங்கிருப்பவர்கள் வெளிமாநிலத்திற்குச் சென்றாலும், அவர்கள் இங்கே வந்தாலும் பிரச்சினை தான். எனவே, தமிழர்களே அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?!












Click it and Unblock the Notifications