38 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் வைரஸ்; வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு: WHO எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் 38 நாடுகளில் பரவியுள்ளது , ஆனால் உயிரிழப்பு பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

குறைந்த காலத்தில் வேகமாக பரவிய ஒமிக்ரான்

குறைந்த காலத்தில் வேகமாக பரவிய ஒமிக்ரான்

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமிக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தியாவிலும் 2 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும்பணி நடந்து வருகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக ஒமிக்ரான் உள்ளது. தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக ஒமிக்ரான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். டெல்டா வைரஸ் தடுப்பு முறைகளே இதற்கும் கடைபிடிக்கப்படவேண்டும்.

38 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் -WHO

38 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் -WHO

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் 38 நாடுகளில் இதுவரை பரவிவிட்டதாக உலக சுகாதாரஅமைப்புத் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா எதிர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து நேற்று பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் " ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 38 நாடுகளுக்கும், உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பில் உள்ள 6 மண்டலங்களுக்கும் பரவிவிட்டது. தென் ஆப்பிரி்க்காவில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

பரவல் அதிகரிக்க வாய்ப்பு WHO

பரவல் அதிகரிக்க வாய்ப்பு WHO

இனிவரும் காலங்களில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது இருப்பினும் இன்னும் டெல்டா வகை வைரஸ்தான் வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. சார்ஸ் கோவிட்டை விட ஒமிக்ரான் வைரஸ் வித்தியாசமானது வேறுபட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அடுத்த இரு வாரங்களில் ஒமிக்ரான் வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒமிக்ரான் பரவல், தீவிரத்தன்மை, நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பித்தல், தடுப்பு நடவடிக்கைகள், ஆய்வுக்கூட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஒமிக்ரான் பரவல் தடுப்பு முயற்சி

ஒமிக்ரான் பரவல் தடுப்பு முயற்சி

ஒமிக்ரான் வைரஸ் வேகம் பரவல் காரணமாக பலநாடுகளில் இது அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று அறிகுறிக்கான சோதனைகள், தனிமைப்படுத்துதல், பின்னர் ஆய்வில் ஓமிக்ரான் கண்டுபிடித்தாலும் அதற்குரிய தனி சிகிச்சை இல்லை தனிமைப்படுத்துதல் பரவலை தடுக்கும் என மருத்துவர்கள் கருத்தாக உள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    தனியாக தடுப்பு எதுவும் தேவை இல்லை

    தனியாக தடுப்பு எதுவும் தேவை இல்லை

    ஓமிக்ரான் வைரஸுக்கு என தனியாக எதையும் செய்யவேண்டாம், கொரோனா வைரஸுக்கான தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், இரு டோஸ் தடுப்பூசி, சமூக இடைவெளி, கும்பல் கூடாதிருத்தல் போன்றவை நம்மை காக்கும் என்கின்றனர் தொற்றுநோய் நிபுணர்கள். வரும்முன் காப்போம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+