நாடு முழுக்க சுமார் 1.40 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் இயங்கும் சுமார் 1.40 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு இப்போது பிளாக் செய்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த நவீனக் காலத்தில் மொபைல் இல்லாமல் வாழவே முடியாது என்ற சூழலே இருக்கிறது. டேட்டிங், ஷாப்பிங் என அனைத்துமே இப்போது மொபைல் மூலமாகவே செய்ய முடிகிறது. மொபைல் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளது.

Why Central govt has Blocked 1.4 Lakh Mobile Numbers suddenly

இது நமக்குப் பெரியளவில் உதவியாக இருந்தாலும் கூட இதன் மூலமாகவே நடைபெறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மொபைல் மூலம் நடக்கும் மோசடிகளால் பொதுமக்கள் ஆண்டுக்குப் பல கோடி ரூபாயை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை: இதற்கிடையே நாட்டில் நடக்கும் டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நிதி மோசடியில் ஈடுபட்ட 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தலைமையில் இணையப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இணைய மோசடி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இதில் இருந்து மக்களைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

இணைக்க முடிவு:குறிப்பாக CFCFRMS எனப்படும் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்புடன் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்படி இந்த இரண்டு போர்ட்டல்களும் இணைக்கப்பட்டால் போலீஸ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மோசடிகள் குறித்து ரியல் டைமில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே திட்டமாகும்.

"பேடிஎம் வேண்டாமே.." தொழில் செய்வோர் ஜாக்கிரதையா இருங்க! வர்த்தகர்கள் கூட்டமைப்பு பரபர அறிவிப்பு


மேலும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழக்கமான 10 இலக்க மொபைல் எண்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் மற்றும் டிராய் பரிந்துரைத்தபடி வணிகம் மற்றும் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட "140xxx" என்று தொடங்கும் எண்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்: கடந்த நவம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ள நிலையில், நிதித்துறையில் சைபர் மோசடிகள் நடக்கும் போது அதை எதிர்கொள்வதில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தயார்நிலை இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மக்களை ஏமாற்றும் மொபைல் எண்களைக் கண்டறிவது தொடர்பாக ஏஐ டூல் ஒன்றை உருவாக்கி உள்ளது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது தான் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 1.40 லட்சம் மொபைல் எண்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மொத்தமாக மெசேஜ் அனுப்பும் 35 லட்சம் நிறுவனங்களை ஆய்வு செய்ததாகவும் அதில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் மெசேஜ் அனுப்பிய 19,776 நிறுவனங்களை பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 500 பேரைக் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+