3 வருட தண்டனை.. தீர்ப்பிற்கு இடையே ஒரே நல்ல செய்தி.. இனி பொன்முடி என்ன செய்ய வேண்டும்?
சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் 3 வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில்.. அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று பொன்முடி வழக்கில் 3 வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பொன்முடி வழக்கு ஆளும் திமுகவை கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் திமுகவில் முதல்முறையாக ஆட்சியில் இருக்கும் போது சிறை செல்லும் அமைச்சர் இவர்தான். அதேபோல் திமுகவில் ஒருவர் குற்றம் செய்ததாக தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல் முறை.
மேல்முறையீடு: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில்.. அவர் மேல்முறையீடு செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது. நேற்று முதல்நாள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இன்றுதான் தண்டனை அறிவிக்கப்பட்டது. இன்றோடு கோர்ட் விடுமுறை. புத்தாண்டு வரை கோர்ட் விடுமுறை உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக 10 நாட்கள் கோர்ட் இயங்காது. இதனால் அவர் உடனடியாக இதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு குறைவு என்ற சூழல் இருந்தது. இந்த நிலையில்தான் நீதிபதிகள் 30 நாட்கள் அவகாசத்தை பொன்முடிக்கு வழங்கி உள்ளனர்.
30 நாள் அவகாசம் இருந்தாலும்.. விடுமுறை காரணமாக அவர் 10 நாட்களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. அதன்பின் மேல்முறையீடு செய்யலாம்.

என்ன செய்ய வேண்டும்?: இந்த 30 நாட்களில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அவர் அமைச்சர் என்பதால்தான் இந்த அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 30 நாட்களுக்குள் பொன்முடி பதவியை ராஜினாமா செய்து கைது செய்யப்பட வழி ஏற்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் 10 நாட்களுக்கு பின் அவர் மேல்முறையீடு செய்யலாம். கோர்ட் தீர்ப்பை அவர் நிறுத்த சொல்லலாம். அதுவும் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்யலாம். ஜனவரி 1க்கு பின் மே வரை கோர்ட் விடுமுறை இல்லை என்பதால் அவர் மேல்முறையீடு செய்வதில் சிக்கல் இருக்காது.
வழக்கு பின்னணி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது: பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ள வில்லை எனவும் வாதிட்டார்.
பொன்முடி வழக்கு: குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில்,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் விவாதம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு பற்றி திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி டாப் அமைச்சர்கள் சிலர் கூடி.. டெல்லி சும்மா விடாது போல. 2024 தேர்தலுக்கு முன் பலர் குறி வைக்கப்படலாம். சமீபத்தில் ரெய்டு விடப்பட்ட எல்லோரும் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.
எல்லோரும் கைதாகவில்லை என்றாலும் கடைசியில் ரெய்டுக்கு உள்ளன டாப் அமைச்சர் கண்டிப்பாக டெல்லி ஆக்சனுக்கு ரெடியாகலாம். 2024 தேர்தலுக்கு முன் நாடு முழுக்க இப்படி பலர் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. செந்தில் பாலாஜி, பொன்முடி எல்லாம் வெறும் தொடக்கம்தான். வரும் நாட்களில் நிலைமை இதைவிட மோசமாகலாம்.
எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோங்க. சில வழக்கில் எல்லாம் முதல்வர் நினைத்தால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. அப்படிப்பட்ட வழக்குதான் இந்த சொத்து குவிப்பு வழக்கு. அதனால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற விவாதம் திமுகவில் அமைச்சர்கள் இடையே எழுந்துள்ளதாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications