கனடாவில் கடும் வெப்பம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

கனடா: கனடா நாட்டில் ஒண்டோரியாவிலும், கியூபெக்கிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கனடா நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துவருகிறது. மாண்டிரியல் நகரில் வெப்பமானது 33 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நகர மக்கள் கடற்கரைகளில் குவிந்தனர்.

ஒட்டாவா மாகாணத்தில் ரிடியு ஆற்றின் நீர்மட்டம் வெப்பத்தின் தாக்கத்தால் குறைந்து கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட வறட்சி எச்சரிக்கை விடப்பட்டது.

ஒண்டோரியோவின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் டொரொண்டோ, கிங்ஸ்ட்டன் மற்றும் பெலிவெலி நகரங்களில் அலைகாற்று வீசும் அபாயமும் உள்ளது. வெயில் அதிகரிப்பதோடு அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். மேலும், தற்போது சில வாரங்களாக கனடாவின் பல பகுதிகளிலும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது.கியூபெக்கில், குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஒண்டோரியாவிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்பகுதியினர் தங்கள் வீடுகளை குளிரூட்டவும், மின்விசிறி பொருத்தவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். வயதானவர்களும், சிறுவர்களும் வெப்பம் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக தண்ணீர் பருகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+