Thaai Kizhavi OTT.. 4 லட்சம் கொடுத்து காப்பாற்றிய ஜவஹர்லால் நேருவை நடுதெருவில் விட்ட தாய் கிழவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 லட்சம் கொடுத்து தனது உயிரை காப்பாற்றிய ஜவஹர்லால் நேருவை கடைசியில் தெருவில் விட்டிருக்கும் தாய் கிழவி.. ஜவஹர்லால் நேரு என்ற இரண்டு இட்லி கேரக்டரை பல ஆண்கள் எக்ஸ் தளத்தில் கொண்டாடுகிறார்கள்.. அதேநேரம் தாய் கிழவி செய்தது சரிதான் என்று கேரக்டருக்காக வாதாடுகிறார்கள்.. ஏனெனில் தாய் கிழவியின் மகன்களுமே அவரை காசுக்காகத்தான் காப்பாற்றுவார்கள்.. ஆனால் அவரை காப்பாற்ற உதவி செய்த ஜவஹர்லால் நேருவை கடைசியில் கண்டு விரட்டிவிடுவார்.. இது ஏன்.. டைரக்டர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்ப்போம்.

தென்மாவட்டங்களில் கந்துவட்டிக்கு விடும் ஒரு வயதான பெண்மணி பற்றிய படம் தான் தாய்கிழவி. குடித்துவிட்டு ஊதாரியாக இருந்த கணவணுடன் குடும்பம் நடத்தி, நான்கு பிள்ளைகளை பெற்ற ராதிகா, மகளை மட்டும் கூடவே வைத்துக் கொண்டு மகன்களை விரட்டிவிடுவார்.. அவரிடம் சொத்துக்கேட்டு போன மகன்களை அவமானப்படுத்தி அனுப்பிவைப்பார்.அதேபோல் போடாமல் விட்ட 3 பவுன் நகையை போட சொல்லி கேட்ட மருமகனை துரத்திவிடுவார்.

Thaai Kizhavi OTT Why did she oust the son-in-law who spent 4L to save her

இறுதியில் அவருக்கு ஏகப்பட்ட நகைகள் இருக்கிறது என்பதை அறிந்த மகன்கள் தாயை காப்பாற்ற செலவு செய்கிறார்கள். அதற்கு திருமணமே ஆகாமல் இருக்கும் முனிஸ்காந்த் அதாவது பென்னிக்குக் உதவி செய்வார். இதனை அறிந்த இரண்டு இட்லி என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவும் கிழவியிடம் இருந்து நகையை வாங்க வேண்டும் என்று உதவி செய்வார்.. இறுதியாக ஆப்ரேஷனுக்கு 4 லட்சம் வேண்டும் என்கிற நிலையில், தாய் கிழவியை காப்பாற்ற ஜஹவர்லால் நேரு 4 லட்சம் கொடுப்பார். அவர் கொடுத்த உதவியை மறைக்கும் பென்னிக்குன் தான் உதவி செய்தது போல் கூறுவார்.

இறுதியாக பிழைத்து வரும் ராதிகா, திருமணமே ஆகாமல் இருக்கும் பென்னிக்குக்கிறகு தனது மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைப்பார்.3 பவுன் செயினுக்காக மகளை சேர்க்காமல் இருந்த மருமகன் ஜவஹர்லால் நேருவை காசை வெட்டிப்போட்டு உறவை தீர்த்துக் கொள்வார்.. அதாவது தேனி, திண்டுக்கல், பாஷையில் சொல்வது என்றால், அறுத்துகட்டுவார்கள்.. அதனை செய்துவிட்டு, மகளை திருமணம் பென்னிக்குக் என்ற முனிஷ்காந்திற்கு திருமணம் செய்து வைப்பார் ராதிகா.. 300 பவுன் நகை வைத்திருந்த ராதிகா மருமகள் மற்றும் மகளுக்கு பிரிந்து கொடுப்பார்.. இதில் எங்குமே தவறு இல்லை என்பதே தாய்கிழவி ஆதரவாளர்களின் வாதம்.

ஆனால் 300 பவுன் நகை வைத்திருக்கும் ராதிகா 3 பவுன் நகையை ஏன் போடாமல் அவரை தன்னுடனே வைத்தார் என்று இரண்டு இட்லி ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். அதேபோல் 4 லட்சம் கொடுத்து காப்பாற்றிய இரண்டு இட்லியை நடுத்தெருவில் விட்டது தவறு என்று விமர்சிக்கிறார்கள். ஏனெனில் மகன்களுமே நகைக்கத்தான் கிழவியை காப்பாற்ற முயன்றார்கள். இதில் மகன்களை சேர்த்துக் கொண்ட தாய்கிழவி, மருமகனை கழட்டிவிட்டது தவறு என்கிறார்கள்.

ஆனால் மருமகன் தாய்கிழவி போட்ட22 பவுன் நகையை வைத்து வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர் தான்.. அந்த பணமே தாய்கிழவி பணம் தான்.. நகைக்காக துரத்திய மருமகனை ஏற்காமல், மகளை சொந்த காலில் நிற்க வைத்து திருமணம் செய்து வைத்த தாய்கிழவி ராதிகாவின் செயல் பாராட்டுக்குரியது என்றும் பேசுகிறார்கள் இன்னொரு தரப்பினர். உங்கள் கருத்து என்ன.. எது சரி.. எது தவறு என்பதை கமெண்டில் கூறுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+