ஓடிடியில் கலக்கும் “வாழா 2” ரிவ்யூ.. சிரிப்பின் பின்னால் மறைந்த கசப்பான உண்மை! ரிவ்யூ
சென்னை: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த வாரம் ஓடிடியில் என்ன படத்தை பார்க்கலாம் என்று ரிவியூ பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கலக்கும் வாழா-2 படம் எப்படி இருக்கு? அந்த படத்தை பார்க்கலாமா? முதல் பாகத்தைப் போல சுவாரசியமாக இருக்கிறதா? இல்லையா? என்று விரிவாக பார்க்கலாம்.

ஓடிடி ரிவ்யூ
"வாழா 2" ஒரு சாதாரண காமெடி படமில்லை. முதல் பாகம் விட்டுச்சென்ற எமோஷனல் தருணங்களை எடுத்துக் கொண்டு, இன்னும் சிரிப்புடன், இன்னும் நெருக்கமான கதையுடன் திரும்பி வந்திருக்கிறது இந்த படம். ஆனால் இது முழுக்க முழுக்க "என்டர்டெயின்மென்ட்" என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது.
வாழா 2 ரிவ்யூ
படம் தொடங்கும் சில நிமிடங்களிலேயே, இது ஒரு நேரடியான கதையல்ல, நிகழ்வுகளின் தொகுப்பு என்பதை புரிந்து கொள்ளலாம். சில இளைஞர்களின் குழந்தை பருவத்தில் இருந்து கதை தொடங்குகிறது. இந்த படத்தில் காட்டப்படும் காட்சிகள் சிலதை நாம் அனுபவித்து இருப்போம் அல்லது நம்முடைய நண்பர்களோ அனுபவித்ததை பார்த்து இருப்போம்.
பொதுவாக வீட்டில் மூத்த பிள்ளைகள் இருக்கிறது என்றால் அடுத்த ஒரு குழந்தைகள் வரப்போகிறது என்றதும் ஆர்வத்தோடு காத்திருக்கும்... ஆனால் அந்த குழந்தை வந்து பிறகு தான் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும்? மூத்த குழந்தைகள் எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது... அந்த குழந்தைகள் மனதிற்குள் இருக்கும் வருத்தம் வேதனை எல்லாம் இந்த படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

இந்த வாரம் ரிவ்யூ
காமெடி விஷயத்தில் "வாழா 2" முதல் பாகத்தை விட முன்னேறியிருக்கிறது. இந்த பாகத்திலும் பெற்றோர்-பிள்ளை உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தந்தை-மகன் இடையேயான மன அழுத்தங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் உருவாகும் மனக்கசப்புகள் மிகவும் நெருக்கமாக காட்டப்பட்டுள்ளன. சிலருக்கு இந்த காட்சிகள் தங்களுடைய வாழ்க்கையை நினைவூட்டக்கூடும்.
இந்த படத்தை பார்க்கும் போது ஒரு நீண்ட கதையை பார்த்த உணர்வு வராது. அதற்கு பதிலாக, பல சின்ன சம்பவங்களின் தொகுப்பைப் போல இருக்கும். ஒவ்வொரு காட்சியும் தனித்தனியாக உருவாக்கப்பட்டு, மெதுவாக கட்டியெழுந்து, கடைசியில் ஒரு பெரிய எமோஷனல் காட்சிகளாகவோ அல்லது கலகலப்போடு முடிகிறது.
படத்தின் முக்கிய பலம் அதன் இயல்பான காட்சிகள்தான். ஒரு தியேட்டரில் நடக்கும் சம்பவம், பள்ளியில் ஏற்படும் மோதல்கள், நண்பர்களுக்கிடையேயான சண்டைகள் இவை எல்லாம் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருப்பதைப் போல உணர்த்துகிறது. சில காட்சிகள் சர்ச்சையாக தோன்றினாலும், அவை கதையின் ஓட்டத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன.

படத்தின் பலம்
இந்த படம் சொல்ல வருவது 'லூசர்கள்' பற்றிய கதை. வாழ்க்கையில் தப்பி ஓடியவர்கள், வழிதவறியவர்கள், சொசைட்டியால் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாதவர்கள். ஆனால் அந்த 'லூசர்கள்' தான் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க முடியும் என்பதையும் படம் subtle-ஆ சொல்லி விடுகிறது. இது தான் இந்த படத்தின் வெற்றி.
முக்கியமாக, வெளிநாட்டிற்கு படிப்பதற்காக செல்லும் கனவுகள் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் கடினமான உண்மைகள் பற்றியும் படம் பேசுகிறது. இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிஜ பிரச்சனைகளை நேராகத் தொட்டிருப்பது இந்த படத்தின் பெரிய பலமாகும். இசை மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் வலிமையை அளிக்கின்றன. சில காட்சிகளில் இசைதான் அந்த உணர்வை முழுமையாக உயர்த்துகிறது.
வாழா 2 படத்தின் மைனஸ்
காமெடியும் எமோஷனலும் சரியான அளவில் கலந்து இருப்பதால், படம் முழுவதும் ஒரு ஜாலியான அனுபவமாக மாறுகிறது. ஆனால் குறைபாடுகளும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் படம் அட்வைஸ் பண்ற மாதிரி தோன்றும். சில காட்சிகள் பழைய மாதிரியான தோற்றத்தையும் தரலாம். பெண்கள் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் ட்ரெண்டிங் நம்பர் 1.. மிருணாள் தாக்கூரின் 'டகோயிட்’ படம் அசத்தல்!
அதனைத் தாண்டி பார்க்கும்போது, "வாழா 2" என்பது இளைஞர்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான, எமோஷனல் நிறைந்த படம்தான். முதல் பாகத்தை விட சில அம்சங்களில் மேம்பட்டு, சில அம்சங்களில் குறைவாக இருந்தாலும், மொத்தத்தில் இது ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தை அளிக்கும். மொத்தத்தில்: சிரிக்கவும், சிந்திக்கவும், சில நேரங்களில் மனதை நெருடவும் செய்யும் ஒரு உயிரோட்டமான இளைஞர் படம் தான் "வாழா 2".












Click it and Unblock the Notifications