45 லட்சம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய அமஹா.. 3 பெருநகரங்களில் மனநல மையங்கள் தொடக்கம்!
டெல்லி: இணையம் மூலம் 45 லட்சம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டெல்லி NCR, மும்பை மற்றும் பெங்களூருவில் சிஇஓ, அமஹா 3 மனநல மையங்களை முதன் முதலாகத் தொடங்கியுள்ளது.
அமஹாவின் உள்ளமைக்குழு கடந்த ஒரு வருடத்தில் 300+ இந்திய நகரங்களில் 35k அமர்வுகளை வழங்கியுள்ளது.

சிஇஓ டாக்டர். அமித் மாலிக், நிறுவனர் & சிஇஓ, அமஹா
தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான மனநல நிறுவனமான "சில்ட்ரன் ஃபர்ஸ்ட்" அமைப்பை அமஹா வாங்கியது.
மனநலம் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் எவருக்கும் தரமான மனநல மருத்துவ முறைகளை அணுகும் நோக்கத்துடன் அமஹா (முன்னர் InnerHour என அழைக்கப்பட்டது) 2016 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற மனநல மருத்துவர் மற்றும் சுகாதாரத் தொழில்முனைவரான டாக்டர் அமித் மாலிக் அவர்களால் நிறுவப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், சமூக தொழில்முனைவரும் உலகளாவிய மனநலத் தூதருமான நேஹா கிர்பால் அவர்கள் இதன் இணை நிறுவனராக இணைந்தார்.
ஏற்கனவே 20 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், கோவிட் தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீடு மற்றும் பணியிடத்திலும் கூடுதல் மனநல சவால்களைக் கொண்டு வந்துள்ளது - அடிமையாதல், மனநோய், தற்கொலைகள், சுய தீங்கு, அதிர்ச்சி மற்றும் பிற மனநல சவால்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளது.

பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அமஹா மனநல மையம்
கடந்த ஏழு ஆண்டுகளில், அமஹா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற மனநல நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது - மருத்துவ நிபுணத்துவம், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான ஆதரவை விரைவாகவும் எளிதாகவும் துன்பத்தில் உள்ளவர்களை அணுகுவதற்கு வழங்குகிறது.
கடந்த ஆண்டு மட்டும், அமாஹாவின் 110 மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் குழு 35,000க்கும் மேற்பட்ட சிகிச்சை மற்றும் மனநல மருத்துவ அமர்வுகளை 15+ மொழிகளில், 300+ இந்திய நகரங்களில் உள்ள தனிநபர்களுக்கு வழங்கியுள்ளனர் - மேலும் பெங்களூரு, டெல்லி NCR மற்றும் மும்பையில் அதன் முதல் மூன்று தனிப்பட்ட மையங்களை அமைத்ததுள்ளது. அமஹா டிஜிட்டல் பயன்பாடு, இலவச சுய-கவனிப்பு கருவிகள் மற்றும் திட்டங்கள், கல்வி உள்ளடக்கம் மற்றும் ஆரம்ப தலையீட்டிற்கான மதிப்பீடுகள் ஆகியவை உலகளவில் 45 லட்சம் மக்களை எட்டியுள்ளது. 20,000 உறுப்பினர்களைக் கொண்ட ஆன்லைன் ஆதரவு சமூகத்திற்கான அணுகலையும் இந்த அமைப்பு வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டில், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, அமஹா டெல்லி NCR-ஐ தளமாகக் கொண்ட புகழ்பெற்ற குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான மனநல நிறுவனமான, சில்ட்ரன் ஃபர்ஸ்ட் அமைப்பை வாங்கியது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கப்பட்டதிலிருந்து 12,000 குடும்பங்களுக்கு ஆதரவளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமஹா அதன் சிகிச்சை அமர்வுகள், மனநல பராமரிப்பு, சுய-கவனிப்பு கருவிகள் மற்றும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பணியிடங்களுக்கான சமூக ஆதரவு ஆகியவற்றின் மூலம், வாழ்நாள் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் கவனிப்பை வழங்க ஒரு ஒற்றை அமைவிட அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியிடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான அமஹாவின் மன நல்வாழ்வுத் திட்டம் தற்போது நாடு முழுவதும் 700,000 தனிநபர்களை உள்ளடக்கியது, மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மேலும் மருத்துவ உதவி மற்றும் பயிற்சியை வழங்குகின்றனர்.

நேஹா கிர்பால், இணை நிறுவனர், அமாஹா
நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அமித் மாலிக் அவர்கள், " இந்தியா போன்ற பெரிய மற்றும் குறைவான சேவை கிடைக்கப்பெற்றுள்ள ஒரு நாட்டில், உயர்தர மனநல சேவைகளை விரைவாக கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வது பயனுள்ள மற்றும் நீடித்த மீட்புக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன் - இதுவே சிக்கல்களில் இருந்து மீளவும், தொடர்ச்சியான மற்றும் நிலையான மன ஆரோக்கியத்துடன் வாழவும் வகை செய்யும். அமாஹாவில், இந்தியா முழுவதிலும் உள்ள எங்களின் அனைத்து மையங்களிலும் நம்பகமான மனநலப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். ஆன்லைனில் முழு நேரமும் வருடத்தில் 365 நாட்களும் நாங்கள் செயலாற்றுகிறோம். உலகின் மனநலச் சுமைகளில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா சுமந்து வருவதால், அமாஹா மிக உயர்ந்த தரத்தில் நிலையான மற்றும் அளவிடக்கூடிய சலுகைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அமஹா குறித்து
அமஹா முன்பு InnerHour என அழைக்கப்பட்டது, இது 2016 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற மனநல மருத்துவர் மற்றும் சுகாதார தொழில்முனைவரான டாக்டர் அமித் மாலிக் அவர்களால் நிறுவப்பட்டது மற்றும் திருமதி நேஹா கிர்பால் 2019 இல் இணை நிறுவனராக இணைந்தார். 110 மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் கொண்ட குழு அவர்கள் ஆன்லைன் மற்றும் நேரிடையாக மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புத் திட்டங்களை மொபைல் செயலி உட்பட அதன் டிஜிட்டல் தளம் மூலம் வழங்கியுள்ளனர்.
இது ஏற்கனவே உலகளவில் மும்பை, பெங்களூர் & டெல்லி NCR பகுதிகளில் 45 லட்சம் மக்களை அடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனம் 300+ இந்திய நகரங்களில் 15+ மொழிகளில் 35,000 க்கும் மேற்பட்ட சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை அமர்வுகளை வழங்கியுள்ளது
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
பாலக் ஜெய்ஸ்வால் l [email protected] l 9682811524
பத்மா ராவ் l [email protected] l 9833180409
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications