ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்க உள்ள அசத்தலான பேச்சாளர்கள்.. 2ஆம் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

புகழ் பெற்ற 15வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் (JLF) இந்த ஆண்டு ஹைபரிட் முறையில் நடைபெற உள்ளது. இந்த இலக்கிய விழா மார்ச் 5-14 முதல் ஆன்லைன் வழியாக நடைபெறும் நிலையில், வரும் மார்ச் 10-14 வரை இது நேரடியாக நடைபெறுகிறது.

சிறப்பான அனுபவம்

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக பல்வேறு தலைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இலக்கியம், சொற்பொழிவு, இசை, கலை ஆகியவற்றில் பார்வையாளர்களுக்குச் சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

Impressive second tranche of speakers in spectacularly hybrid Jaipur Literature Festival

இந்த நிகழ்வுக்கு ஒன்இந்தியா மீடியா பார்ட்னராகவும், டெய்லி ஹன்ட் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பார்ட்னராகவும் உள்ளது. பலதரப்பட்ட சிந்தனையாளர்களை ஒரே தளத்திற்கு அழைத்து வந்து சிந்தனை மிக்க விவாதம் மற்றும் உரையாடலில் ஈடுபட இவை உதவ உள்ளன.

தேர்தல் செயல்முறை மற்றும் ஜனநாயக அமைப்புகள் செயல்படும் முறை குறித்த வாத பிரதிவாதங்கள் இந்த விழாவில் இடம் பெற்று இருக்கும்.

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும் Every Vote Counts என்ற புத்தகத்தை எழுதியவருமான நவின் பி சாவ்லா; பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் Makers of Modern Dalit History புத்தக ஆசிரியருமான குரு பிரகாஷ் பாஸ்வான், ஓய்வுபெற்ற புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் ஆகியோரை உள்ளடக்கிய குழு அரசியல் மற்றும் தேர்தல் செயல்முறைகள், ஜனநாயகத்தின் முரண்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவானது, இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தையும் இது குறித்த உரையாடல்களையும் ஆரம்பித்து வைக்கிறது. அதேநேரம் கலை தொகுப்புகள், கலாசார நிகழ்வுகள், ஜெய்ப்பூர் இசை நிகழ்ச்சிகளும் இலக்கிய திருவிழாவிற்கு இணையாக நடக்கும்.

பேச்சாளர்கள் பட்டியல்

15 பேச்சாளர்கள் கொண்ட முதல் பட்டியலில், Women Who Wear Only Themselves புத்தகத்தை எழுதிய அருந்ததி சுப்ரமணியம்; டெல்லியைச் சேர்ந்த வாஸ்குலர் மற்றும் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரும் சர் கங்கா ராம் மருத்துவமனையில் உள்ள வாஸ்குலர் கேத் ஆய்வகத்தின் இயக்குநருமான டாக்டர் அம்பரீஷ் சாத்விக்; புகழ்பெற்ற கலை விமர்சகரும் கலை வரலாற்றாசிரியருமான பிஎன் கோஸ்வாமி; ஹட்சன் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐரோப்பிய ஆய்வுகளுக்கான வில்ஃப்ரைட் மார்டென்ஸ் மையத்தில் மூத்த நபரும் முன்னாள் போர்த்துகீசிய அரசியல்வாதியுமான புருனோ மாசெஸ்; வைகிங் ஏஜ் வைக்கிங் வுமன் உயிர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபா நுய் டாக்டர் கேட் ஜார்மன்; 2003 புக்கர் பரிசு வென்ற டிபிசி பியர்; இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஃபரூக் தோண்டி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இதில் 2002 புலிட்சர் பரிசு வென்ற ஜொனாதன் ஃபிரான்ஸன்; நாவல்கள் எழுத்தாளர் குனல் பாசு; கல்வியாளர் மற்றும் எழுத்தாளருமான முகுலிகா பானர்ஜி; நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான டாக்டர் சசி தரூர்; நாவலாசிரியர் ஷிவானி சிபல்; நேரு: இந்தியாவை வரையறுத்த விவாதங்கள் உள்ளிட்ட முக்கிய புத்தகங்களை எழுதியவரும் வரலாற்றாசிரியருமான திரிபுர்தமன் சிங்; வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத்.ஆகியோரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

பேச்சாளர்களின் பட்டியல்

25 பேச்சாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலில் இந்திய கவிஞர், LGBTQ ஆர்வலர் அகில் கத்யால்; பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர், இலக்கிய எழுத்தாளர் ஆண்ட்ரூ லோனி; மும்பையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் அனிந்திதா கோஸ்; பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் டேவிட் வெங்ரோ; விருது பெற்ற பிரிட்டிஷ்-துருக்கிய நாவலாசிரியர் மற்றும் துருக்கியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் எலிஃப் ஷஃபாக்; ராஜ்யசபா எம்.பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்; சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியர் கே.சச்சிதானந்தன்; PEN ஓபன் புக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜமைக்கா கவிஞர் கீ மில்லர் ஆகியோர் இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Recommended Video

    இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய திருவிழா.. Jaipur Literature Festival மார்ச் 5 முதல் தொடக்கம்

    மேலும், பங்களாதேஷ் பத்திரிகையாளர் மஹ்ஃபுஸ் ஆனம்; மிகவும் பாராட்டப்படும் வரலாற்றாசிரியர் ரவிவர்மா மனு எஸ். பிள்ளை; அமெரிக்க கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் மாயா ஜசனோஃப்; பிரிட்டிஷ் எழுத்தாளர் மோனிகா அலி; நடிகரும் குழந்தை உரிமைகள் ஆர்வலருமான நந்தனா தேவ் சென்; ப்ஸ் ஃபோர்ப்ஸ் மார்ஷல், இணைத் தலைவர் மற்றும் The Struggles and the Promises என்ற புத்தகத்தின் ஆசிரியர் நௌஷாத் டி. ஃபோர்ப்ஸ்; பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ரிது மேனன்; எழுத்தாளர் ராபர்ட் மக்ஃபர்லேன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

    Impressive second tranche of speakers in spectacularly hybrid Jaipur Literature Festival

    பல தரப்பட்ட கருத்துகளை அளிக்கும் வகையில் இந்தப் பேச்சாளர் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகர், இயக்குனர் ரூபர்ட் எவரெட்; பிரிட்டிஷ் கவிஞர் ரூத் பேடல்; இந்திய நாவலாசிரியர் சைகத் மஜும்தார்; இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக; விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை சோனாலி பிந்த்ரே; சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் தனுஜ் சோலங்கி; எழுத்தாளர் வித்யா டெஹேஜியா, மூத்த இந்திய பத்திரிகையாளர் வினோத் கப்ரி ஆகியோரும் இதில் இடம் பெற்று உள்ளனர்.

    நுழைவு கட்டணம்

    நேரடியாக நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணமாக ஒருவர் ரூ.200 செலுத்த வேண்டும். ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா முதலில் ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 1 வரை நடைபெற இருந்தது. இருப்பினும், அதிகரித்த கொரோனா கேஸ்கள் காரணமாக அப்போது தள்ளி வைக்கப்பட்டது. கூடுதல் தகவலுக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விழா இணையதளத்திற்குச் செல்லலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+