விடுதிக்குள் அத்துமீறி புகுந்து ‘பாலியல் கல்வி’ கற்றுத் தந்த அரசு அதிகாரி.. மாணவிகள் பரபரப்பு புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து பாலியல் கல்வி கற்றுத் தருவதாக தொல்லை கொடுத்ததாக மாவட்ட சமூக நல அதிகாரி மீது மாணவிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது ராமநகரா. இங்கு மாநில அரசுக்கு சொந்தமான மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு தங்கியிருக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர், பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த வாரம், இந்த விடுதி மாணவிகள் சேர்ந்து கர்நாடக மாநில பெண்கள் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்தனர். அப்புகாரில் அம்மாவட்ட சமூக நல அதிகாரியாக பணியாற்றும் நாகராஜப்பா என்பவர் மாணவிகளின் விடுதிக்குள் இரவு நேரங்களில் புகுந்து மாணவிகளிடம் பாலியல் கல்வி குறித்து அத்துமீறிப் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது.
மாணவிகள் அளித்த புகாரையடுத்து கடந்த புதன்கிழமை அந்த விடுதியில் மகளிர் ஆணைய தலைவர் மஞ்சுளா விசாரணை நடத்தினார். அப்போது, நாகராஜப்பா விடுதி மாணவிகளைக் குழுவாகக் கூட்டி பாலியல், திருமண வாழ்க்கை, காதல் மற்றும் ஆண் நண்பர்கள் பற்றி பேசியது உறுதி செய்யப்பட்டது.
மேலும், விடுதியில் இருந்த சிலர் நாகராஜப்பாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து விடுதியின் வார்டனையும் மிரட்டி நீண்ட காலமாக, நாஜராஜப்பா இப்படி செய்து வந்துள்ளார். மேலும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பற்றி விசாரித்து அவர்களை தொட்டுப்பேசி தவறாக நடந்து கொள்ளவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் மாநில மகளிர் ஆணையம் விசாரணை முடியும் வரை நாகராஜப்பாவை பணியிடை நீக்கம் செய்ய கர்நாடக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது நாகராஜப்பா மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications