பொதுமக்கள் பாதுகாப்பு மேம்பாடு: டெல்லி போலீசாருடன் கைகோர்த்த Dailyhunt & OneIndia!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 உள்ளூர் மொழி கன்டென்ட் டிஸ்கவரி தளமான டெய்லி ஹன்ட் மற்றும் நாட்டின் முதன்மையான டிஜிட்டல் செய்தி தளமான ஒன் இந்தியா ஆகியவை இப்போது டெல்லி போலீசாருடன் கை கோர்த்துள்ளன.

இதன் மூலம் இணையப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய சமூக பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் டெல்லி போலீசாரின் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

Dailyhunt, OneIndia and Delhi Police Collaborate to Empower Citizens and Enhance Public Safety

டெய்லி ஹன்ட் மற்றும் ஒன் இந்தியா தங்களிடம் இருக்கும் மிகப் பெரிய வாசகர் தளத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைக் கொண்டு சேர்க்கும். இதன் ஒரு பகுதியாக, டெய்லிஹன்ட் தளத்தில் வீடியோக்கள், கார்டுகள், லைவ் ஸ்ட்ரீம் எனப் பல வகைகளில் டெல்லி போலீசார் எடுக்கும் முயற்சி பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

அதேபோல ஒன்இந்தியா தளத்தில் பல்வேறு மொழிகளில் இது தொடர்பான செய்திகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியாகும். பல்வேறு மொழிகளிலும் அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த தகவல்கள் சென்றடைவதை ஒன் இந்தியா உறுதி செய்யும். டெல்லி போலீசாருக்கும் மக்களுக்கும் இருக்கும் தொடர்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல முக்கிய தகவல்களை டெல்லி போலீஸ் வெளியிடும்.

இது குறித்து டெல்லி போலீஸின் டிசிபி பிஆர்ஓ சுமன் நல்வா கூறுகையில், "பொதுமக்களுடன் குறிப்பாக இளைஞர்களுடன் எங்கள் தொடர்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இதன் இலக்கு. டெய்லி ஹன்ட் மற்றும் ஒன்இந்தியாவின் பரந்த வாசகர் வட்டம் மூலம் இதை அடைய முடியும் என நம்புகிறோம். மக்களிடம் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கவும், எங்கள் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்தவும் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த இரு தளங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறோம்" என்றார்.

Dailyhunt, OneIndia and Delhi Police Collaborate to Empower Citizens and Enhance Public Safety

இது குறித்து Eterno Infotech இயக்குநர் ராவணன் கூறுகையில், "எங்கள் தளத்தில் டெல்லி காவல் துறை இருப்பதில் பெருமை.. டெல்லி போலீசாருக்கும் சமூகத்திற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தவும் முக்கிய செய்திகள் மக்களுக்குச் சரியாகச் சென்று சேர்வதையும் இலக்காக வைத்துள்ளோம். இந்த கூட்டு முயற்சி என்பது பாதுகாப்பான மற்றும் நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் டெய்லி ஹன்ட் மற்றும் ஒன் இந்தியாவின் உறுதிப்பாட்டையே பிரதிபலிக்கிறது" என்றார்.

டெல்லி போலீஸ், டெய்லிஹண்ட் மற்றும் ஒன்இந்தியா எடுத்துள்ள இந்த முயற்சி பொது பாதுகாப்பை உறுதி செய்து, மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்று சேர்வதை உறுதி செய்கிறது.

டெய்லி ஹன்ட்: டெய்லி ஹன்ட் இந்தியாவின் நம்பர் 1 கன்டென்ட் டிஸ்கவரி தளமாகும். ஒவ்வொரு நாளும் 15 மொழிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான கன்டென்களை வழங்குகிறது. டெய்லி ஹன்டில் உள்ள அனைத்து கன்டென்ட்களும் உரிய உரிமம் பெற்றவை. இவை 50,000+க்கும் மேற்பட்ட கன்டென்ட் பாட்னர்களிடமும் இருந்தும் 50,000+ கிரியேட்டர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். 100 கோடி இந்தியர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறும் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே டெய்லி ஹன்டின் நோக்கம்.

ஒவ்வொரு மாதமும் 350 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் யூசர்ஸ் உள்ளனர். ஆக்டிவ் யூசர்கள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். இதன் தனித்துவமான ஏஐ தொழில்நுட்பம் மூலம் வாசகர்களின் விருப்பம் டிராக் செய்யப்பட்டு அதற்கேற்ற கன்டென்ட்களும் நோட்டிஃபிக்கேஷன்களும் அளிக்கப்படும்.

ஒன்இந்தியா: ஒன்இந்தியா பல மொழிகளில் இயங்கும் ஒரு செய்தி தளமாகும். மக்களை அவர்களின் சொந்த மொழியில் இணைக்க வேண்டும் என்பதற்காக இது 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன் இந்தியா ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேருக்கு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் ஒடியா ஆகிய 11 மொழிகளில் செய்திகளை வழங்குகிறது.

இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு ஆன்லைன் வழியாகச் செய்திகளைச் சென்று சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன் இந்தியா ஆரம்பிக்கப்பட்டது. டிஜிட்டலை பயன்படுத்தும் ஒவ்வொரு 5 யூசர்களில் ஒருவர் ஒன் இந்தியாவை பயன்படுத்துவதாக ComScore கூறுகிறது. துல்லியமான செய்திகளை உடனுக்கு உடன் தருவது, தொலைநோக்கு பார்வை ஆகியவை பிராந்திய மொழிகளில் மற்ற தளங்களை காட்டிலும் எங்களை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+