Kitchen Tips: பிரிட்ஜில் வைத்தாலும் கொத்தமல்லி, கறிவேப்பிலை கெட்டு போகிறதா? கவலை வேண்டாம்!
How to protect Kothamalli: கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் என்னதான் பாதுகாப்பாக சுற்றி பிரிட்ஜில் வைத்தாலும் அழுகி விடுகிறதே என்ற கவலையா? இதற்கு ஒரு ஈஸி டிப்ஸ் பார்க்கலாமா?

முன்பெல்லாம் காய் வாங்கினாலே கொத்தமல்லி, கறிவேப்பிலை இலவசமாக கொடுக்கிறார்கள். இப்போதும் சில இடங்களில் கொடுக்கிறார்கள். ஆனால் நகரம், மாநகரங்களில் கொடுப்பது போல் தெரியவில்லை.
பெரிய பெரிய கடைகளில் கறிவேப்பிலை மட்டும் கொடுக்கிறார்கள். அதுவும் பில் போடும் கவுன்ட்டரில் கேட்டால்தான் தருவார்கள். இல்லாவிட்டால் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் தலா ரூ 5 முதல் 15 வரை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கிறது.
இப்படி காசு கொடுத்து வாங்கி வந்து அவற்றை என்னதான் கழுவி தண்ணீரை வடித்து ஒரு கவரில் சுற்றி போட்டு வைத்தாலும் 2 நாள் அல்லது 3 நாட்கள் மட்டும்தான் இருக்கும்.
பின்னர் கறிவேப்பில்லை உலர்ந்துவிடும். கொத்தமல்லி அழுகிவிடும், மஞ்சள் நிறத்தில் பழுத்துவிடும். சில வீடுகளில் தினந்தோறும் ரசம் வைக்கும் போது அதற்கு கொத்தமல்லியை கட்டாயம் சேர்த்தால்தான் வாசனை நன்றாக இருக்கும்.
ஆனால் இது போல் அழுகிவிடுவதால் காசு கொடுத்து வாங்கியும் அந்த கட்டு வீணாகிவிடும். எனவே கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் 5 நாட்களாவது வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
அதாவது கொத்தமல்லியில் உள்ள வேர்களை நீக்கிவிட்டு கொத்தமல்லியை கழுவி ஒரு வடிஜல்லியில் வைத்து தண்ணீர் வடிந்ததும், டிஸ்யூ பேப்பரில் சுற்றி எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளலாம்.
அது போல் கறிவேப்பிலையையும் கழுவி நீரை வடிகட்டி டிஸ்யூ பேப்பரில் சுற்றி சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications