Mapillai Samba Laddu: மாப்பிள்ளை சம்பா அரிசியை வைத்து ஒரு சூப்பரான லட்டு செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

Mapillai Samba Laddu recipe: மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஒரு ஆரோக்கியமான லட்டு ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இந்த அரிசி ஆண்களுக்கு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். மேலும் தாம்பத்ய குறைபாடுகளையும் போக்கும்.

Mapillai Samba Laddu

சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த அரிசியின் சிறப்பு என்னவென்றால் ஆண்மையை பலப்படுத்தும். ஆண்மை குறைபாடு பிரச்சனையை நீக்கும்.

தினமும் இந்த அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. நீரிழிவு வந்துவிட்டாலே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த அரிசியை நாம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அரிசி உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும். இதன் சிவப்பு நிறத்தில் இருந்துதான் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கிறார்கள் என சொல்லப்படுவதுண்டு.

இந்த அரிசியை வைத்து ஒரு ஆரோக்கியமான லட்டு செய்யலாம். அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி- 1 கப்
வெல்லம் (பொடித்தது)- அரை கப் முதல் முக்கால் கப் வரை
சிவப்பு அவல்- கால் கப்
நெய்
முந்திரி, திராட்சை பொடியாக நறுக்கியது
ஏலக்காய்- 2

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியை கழுவி சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதை எடுத்து வறுத்துக் கொள்ளவும்.
  • அரிசி ஆறியதும் அதையும் ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லத்தை சேர்த்து பல்ஸ் மோடில் சுற்றி எடுக்கவும்.
  • அதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். அது போல் சிவப்பு அவலை ரபை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் எல்லாவற்றையும் ஒரு பெரிய பேசினில் மாற்றிக் கொள்ளவும்.
  • அடுப்பில் சிறிது நெய்யை காய வைத்து அதில் முந்திரியை உடைத்தும் திராட்சையை கட் செய்தும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதை அந்த மாவு கலவையில் கொட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் உருண்டை உருட்ட தேவையான நெய்யை அடுப்பில் காட்டி உருக்கிக் கொள்ளவும்.
  • பேசினில் உள்ள மாவு கலவையை ஒன்று போல் கலந்து விட்டு நெய்யை ஊற்றி, கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். இதில் தண்ணீர் ஏதும் சேர்க்காததால் இது கெட்டு போகாது. ஒரு வாரத்திற்கு வைத்து சாப்பிடலாம்.
  • ஒரு வேளை நெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் சேர்த்து உருட்டிக் கொள்ளலாம். இந்த உருண்டை உடலுக்கு மிகவும் நல்லது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+