Nallampatti chicken: ஈஸியான நல்லாம்பட்டி சிக்கன் வறுவல்.. ஒருமுறை இப்படி சமைத்து பாருங்க
Nallampatti kozhi varuval: என்னதான் சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ் என நூற்றுக்கணக்கான வெரைட்டி இருந்தாலும் கொங்கு பகுதியில் சமைக்கும் கோழிக்கறியின் ருசியே தனிதான்.. சுவையாகவும், சட்டென்றும் சமைக்கக் கூடிய ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நூற்றுக்கணக்கான சிக்கன் வெரைட்டிகள் இருந்தாலும் கொங்குநாட்டு உணவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரே மாதிரி சிக்கனை சமைத்து போரடித்துவிட்டதா.. ஈஸியாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுவையாகவும் இருக்க வேண்டுமா.. அப்ப இது உங்களுக்கான ரெசிபிதான். பேச்சுலர்களும் ஈஸியாக சமைக்கக் கூடிய ருசியான ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் எப்படி சமைப்பது என்று பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருள்கள
கோழிக்கறி - 1 கிலோ,
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 20
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
நல்லாம்பட்டி சிக்கன் வறுவல் செய்முறை
1. முதலில் கோழிக்கறியை மஞ்சள் தூள், கல் உப்பு போட்டு நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
3. வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
4. நன்கு வதக்கி அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
5. பின்னர், சிறிதாக நறுக்கிய சிக்கனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. சிக்கனை நன்றாக வதக்கவும். அதில், விதை நீக்கிய காய்ந்த மிளகாயை சிறிது சிறிதாக கிள்ளிப் போடவும்.
7. அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கோழிக்கறியை நன்கு பதமாக வேகவிடவும். பின்னர், கருவேப்பிலை கொத்தை போட்டு, சிறிது நல்லெண்ணெயை மேலே ஊற்றி மூடி வைத்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
9. ருசியான கமகமக்கும் நல்லாம்பட்டி சிக்கன் வறுவல் ரெடி.
எந்தவொரு மசாலா பொருள்களும் இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய இந்த நல்லாம்பட்டி சிக்கனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அப்புறம் என்ன உங்க சன்டேவை ஸ்பெஷலாக்கிடுங்க.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications