Thoothuvalai Rasam: மழைக்காலம்! சளி பிடிச்சா தூதுவளை போட்டு ரசம் வச்சி சாப்பிடுங்க! கப்புனு நின்னுடும்!
Thoothuvalai Rasam recipe: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள், பெரியவர்களுக்கு சளி பிடிக்கும். தொண்டை கமறும். இருமல் இருக்கும். இவர்கள் எல்லாம் வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

நம் மூதாதையர்கள் நமக்காக எத்தனையோ அற்புதமான மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அதில் அற்புதமான ஒன்று தூத்துவளை. இது கொடி வகையை சேர்ந்தது, அப்படியே தரையில் படரும்.
ஒவ்வொவருவரது வீட்டிலும் இருக்க வேண்டிய செடி இது. இந்த தூத்துவளையின் இலைகள் ஏறத்தாழ Heartin வடிவத்தில் இருக்கும். இதன் பின்னால் முட்கள் இருக்கும். இது சளித் தொல்லைக்கு மிகவும் நல்லது. தூதுவளையில் துவையல் அரைக்கலாம், சூப் வைக்கலாம். எல்லாவற்றையும் விட ஒரு ரசம் வைக்கலாம். அதையே சூப்பாக குடித்துவிடலாம். எப்படி செய்வது என்பதை பார்த்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை- ஒரு கைபிடி
தக்காளி- 1
பருப்பு வேக வைத்த தண்ணீர் - 250 மில்லி
புளி கரைசல் 25 மில்லி
உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -3
மிளகு, சீரகம் தலா 1 டீஸ்பூன்
பூண்டு - தோலுடன் 6 பல்
கடுகு- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிது
செய்முறை
தூதுவளை கீரையின் இலையில் உள்ள முட்களை உடைத்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அந்த கீரையை அலசி தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
சாம்பாரும் வைத்து ரசமும் வைப்பது என்றால் சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதன் தண்ணீரை ரசத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
வெறும் ரசம் என்றால் துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் வேகவைத்து அதை நன்கு கடைந்து கொள்ளுங்கள். மேற்கண்ட இரு முறைகளிலும் தக்காளியை போட்டு வேகவைத்து கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் 2, சிறிது பெருங்காயம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கீரையை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுங்கள்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும், பிறகு தூதுவளை விழுதை சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அதில் கடைந்த பருப்பு அல்லது பருப்பு வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி தண்ணீர் சேர்த்து விடவும். மேலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிவிடவும். அடுப்பை மிதமாக வைத்து ரசம் நுரைத்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடவும். கொதிக்கக் கூடாது. இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications