நலம் தரும் குழந்தை இயேசு
குழந்தை இயேசுவின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. பிரேகு நகரில் குழந்தைஇயேசுவின் புகழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடு முழுவதும்பரவியிருந்தது.
ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திரு உருவம் ஸ்பெயின் நாடிலிருந்து வந்ததுஎன வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
ஸ்பெயின் நாட்டின் இளவரசி குழந்தை இயேசுவை பாதுகாத்து பூஜை செய்துவந்தார்.தன் மகளான போலிக்சோனா லோகோவிட்ஸ்க்கு திருமணம் ஆன பின் அவரிடம்குழந்தை இயேசு திருச்சொரூபத்தை அளித்து பூஜை செய்து வருமாறு கூறினார்.
அவரும் அதை பூஜை செய்து பல சிறப்புகளை பெற்றார். தன் கணவர் இறந்த பின்குழந்தை இயேசு சிலையை பிரேகு கார்மல் சபைத் துறவிகளுக்கு கொடுத்து, குழந்தைஇயேசுவின் பெருமைகளைக் கூறி தொடர்ந்து பூஜை செய்து வருமாறு கூறினார்.
அவர்களும் குழந்தை இயேசுவை பூஜித்து வந்தனர். ஆசிரமம் நன்கு முன்னேற்றம்அடைந்தது. 30 ஆண்டுகள் நடந்த கடும் போருக்கு பின் தந்தை சிரிலிஸ் பிரேகு நகரமடத்திற்கு சென்று குழந்தை இயேசு சிலையை சிறிய கோவிலில் நிர்மாணித்தார்.
அவர் குழந்தை இயேசுவை பிரார்தித்துக் கொண்டிருந்த போது அசரீரி குரல் என் மேல்இரக்கமாயிருந்தால் நான் உன்மேல் இரக்கமாக இருப்பேன். உனக்கு அமைதிஅளிப்பேன் என கூறியது.
அதன் பின் அவர் சிதைந்திருந்த குழந்தை இயேசு சிலையை சரி செய்ய நிதி திரட்டிவேறு புதிய சிலையை நிர்மாணித்தார், ஆனால் அதன் மேல் விளக்கு கம்பம் உடைந்துஅந்த சிலை உடைந்து போனது,
தன் திருச்சுரூபத்தை அலட்சியப்படுத்தியது குழந்தை இயேசுவுக்கு பிடிக்கவில்லை எனதெரிந்தது. அதன் பிறகு பதவியேற்ற துறவியார் திருச்சுரூபத்தை சரி செய்தார். அங்கு வருவோர் எல்லா நோயும் நீங்கப்பெற்று எல்லா வளமும் பெற்று வந்தனர்.அவரது அருள் பெற்றோர்அந்த அனுபவங்களை தெரிவிக்க உலகம் முழுதும் குழந்தைஇயேசு புகழ் பரவி வருகிறது.
பெங்களூரில் குழந்தை இயேசு
பெங்களூரில் உள்ள குழந்தை இயேசு ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் திருஇருதய பங்குத்தந்தை ஆன்மிகப்பணியாற்ற இடமின்றி தவித்து வந்தார். அப்போது சிலர் சொன்ன யோசனையின் படிகுழந்தை இயேசுவை பிரார்த்திக்க, அவர் பிரார்த்தனைக்கு உடனடியாகபதிலளிக்கப்பட்டது.
இப்போது விவேக் நகர் என அழைக்கப்படும் சொன்னஹல்லியில் இடம் கிடைக்க1969-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் நாள் புதிய கோவிலுக்கு அடித்தளம்அமைக்கப்பட்டது.
அதன் பின் 8 மாதம் கழித்து மக்கள் நன்கொடையால் 1971-ம் ஆண்டு மே மாதம்குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் திருஇருதயப் பங்கிலிருந்து கொண்டு வரப்பட்டுபழைய கூடாரத்தில் நிறுவப்பட்டது. இந்த கோவிலுக்கு கூடாரக் கோவில் என்றுபெயரிடப்பட்டது.
சுமார் 8 ஆண்டு காலம் இங்கு தான் இன்று விவேக் நகரில் அருளாசி வழங்கி வரும்குழந்தை இயேசு தேடி வருவோருக்கு அருள் வழங்கி வந்தார்.
விவேக் நகரில் வாங்கப்பட்ட புதிய இடத்திற்கு ரோஜா தோட்டம் எனபெயரிடப்பட்டது. அந்த பகுதி செடி கொடிகள் நிறைந்து காடு போல் இருந்ததால்நச்சுப்பாம்புகள் அந்த பகுதியில் நிறைந்திருந்தன. மழைக்காலத்தில் மேலும்தொந்தரவு. ஆயினும் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை தரிச்சித்துகாரியசித்தி பெற்று மகிழ்ந்தனர்.
1979-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தற்போது இருக்கும் புதிய ஆலயம்நிர்மாணிக்கப்ட்டது. பெரும் திரளான மக்கள் குழந்தை இயேசுவை தரிசித்து தங்கள்பிரார்ததனைகள் பதிலளிக்கப்படுவது கண்டு அவரை தஞ்சமடைந்த வண்ணமுள்ளனர்.
குழந்தை இயேசுவுக்கு வியாழக்கிழமை சிறப்பான நாளென்பதால் அன்று மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கிறது. நாமும் அவரை பிரார்த்தித்து நலம் பல அடைவோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications