நம்பிக்கை ஒளி...
கிறிஸ்துமஸ் என்றால் சாண்டாகிளாசுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்தான்.
கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு.அது 17-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது.
17-ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்ட்டின் லூதர் காட்டில் சென்று கொணடிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது.
அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனைப்பிரார்த்தித்தவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார்.
காட்டிலிருந்த ஒரு மரத்தைப் பார்த்தபோது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதைக் கண்டார். அப்போதுவியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் பிறந்த இடத்திற்கு, சாஸ்திரிகளை அழைத்துச் சென்ற நட்சத்திரம் போலத்தான் இவையும் என உணர்ந்தார்.
தனது சர்ச் போதனைக்கு இது ஒரு சிறந்த கருத்து என மார்ட்டின் நினைத்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.
17-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸின் போது மெழுகுவர்த்திகளை முக்கோண வடிவில் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த மெழுகுவர்த்திகள் கிறிஸ்துமஸ் சீசன்முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். அதே போல் பல வீடுகளில் கிறிஸ்துமஸ் மரமும் இருக்கும்.
அவை விட்டத்தில் தலை கீழாக தொங்கவிடப்பட்டிருக்கும். இப்போது அழகுக்குப் பயன்படுத்தப்படும் சாண்டிலியர் விளக்குகள் போல இருக்கும். மரத்தின்முக்கோண அமைப்பு தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியின் வடிவில் இறைவனை குறிப்பதாக கருதப்படும்.
மரத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற மார்ட்டின், அதை தன் வீட்டின் விட்டத்தில் தொங்க விடவில்லை. மெழுகுவர்த்திகளை எடுத்து அதை பற்றவைத்து மரத்தின் கிளைகளில் வைத்தார்.
பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து மரத்தை சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர்,நட்சத்திரங்களின் ஒளி இறைவன் நான் உன்னைக் கைவிடமாட்டேன் என நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது என உடல் சிலிர்க்க தெரிவித்தார்.
இறைவனின் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.
அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது.கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல் இறைவன் நம்மை காப்பாற்ற காத்திருக்கிறார்என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications