மதங்களை இணைத்த பண்டிகைகள்!

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு தீபாவளியும், ரம்ஜானும் இரு மத மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிட்டன.

இந்த இரு பண்டிகைகளும் ஒரே நேரத்தில் இணைந்து வருவதால், இந்த வருடம் தமிழகத்தின் ஜவுளிக் கடைகளிலும், நகைக்கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் மற்றும் பிற கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. கட்டுக்கடங்காத மக்கள்நெரிசலால் கடை வீதிகள் திணறி வருகின்றன.

தீபாவளி முடிந்த அடுத்த சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் இரு மதத்தை சேர்ந்த மக்களும் புதுத் துணிகள்வாங்குவதில் மும்ரமாக உள்ளனர். அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இந்துக்களும், முஸ்லீம்களும் அருகருகே நின்று புதுத்துணிகளை வாங்குவது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என தமிழகத்தின் முக்கியப் நகரங்கள் மட்டுமல்லாது அனைத்து சிறு, குறு நகரங்களிலும் கூடஎங்கு பார்த்தாலும் திருவிழாக் கூட்டம் போல மக்கள் சாரை சாரையாக புதுத் துணிகளையும், பொருட்களையும் வாங்கிச் சென்றுவருகின்றனர்.

Chennai Shoppingகுறிப்பாக சென்னையில் வரலாறு காணாத பண்டிகைக்கால உற்சாகம் காணப்படுகிறது. தியாகராய நகரில் நடக்கக் கூட முடியாதஅளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அத்தோடு புரசைவாக்கம், பாண்டிபஜார் என நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும்மக்கள் நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றன.

இந்து, முஸ்லீம்கள் இணைந்து ஒரே விழாவைக் கொண்டாடுவது போல இருக்கு என்கிறார்கள் ஜவுளிக் கடைக்காரர்கள்.ஒருவருக்கு ஒருவர் அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இரு மதத்தினரும் நடத்தும் பர்ச்சேசிங் நிச்சயம் மனம்நிறைக்கும் காட்சி தான்.

இரு மதத்தினருக்கு இடையேயும் பூசலை ஏற்படுத்தத் துடிக்கும் விஷம சக்திகள் இந்தக் காட்சியைப் பார்த்தால் நிச்சயம் நொந்துநூலாகி விடுவார்கள் என்கிறார் ஒரு ஜவுளிக்கடைக்கார்.

அதைப் போலவே இக் காட்சியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போயிருப்பது காவல்துறையினரும் தான். இந்துக்களும்,முஸ்லீம்களும் குடும்பம் குடும்பமாக ஒரே அணியாக செல்வதைப் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்பவே நிம்மதியாகவும்மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது என்கிறார்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்.

ஜவுளிக் கடைகள் மட்டுமல்லாது இம் முறை நகைக் கடைகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. பெரும்பாலும்தீபாவளி நேரத்தின்போது நகைக் கடைகளில் கூட்டம் இருக்காது. தீபாவளிக்கு தங்கம் வாங்கக் கூடாது என்ற இந்துக்களின்ஐதீகமே இதற்குக் காரணம்.

ஆனால் இந்த முறை அதுவும் மாறி விட்டது. ஜவுளிக் கடைகளுக்கு ஈடாக நகைக் கடைகளிலும் பெரும் கூட்டம். இந்துக்களும்,முஸ்லீம்களும் நகைகளை அள்ளிச் சென்று வருகின்றனர்.

தீபாவளியும் ரம்ஜானும் கைகோர்த்து வந்து மக்களையும் கைகோர்த்துவிட்டு இந்த விழாக் காலத்தை ரொம்பவேஅழகாக்கிவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+