திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தநிகழ்ச்சியைக் கண்டு பரவசமடைந்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 6மணியளவில் நடந்தது.
மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த பிரமாண்டமான கொப்பரையில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றப்பட்டவுடன் "அண்ணாமலைக்கு அரோகரா" என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. லட்சக்கணக்கானமக்கள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றத்தில்...
இதற்கிடையே மதுரை-திருப்பரங்குன்றத்திலும் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதுவரை இல்லாதஅளவுக்கு மிகவும் அமைதியான முறையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவுக்கு அருகே தான் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினை செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை அதுமாதிரியான கோரிக்கை எதையும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள்விடுக்கவில்லை.
வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உயர் அதிகாரிகள் பலர்இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து முருகனை தரிசித்துஅருள் பெற்றுச் சென்றனர்.
முன்னதாக காலையில் 2 காளை மாடுகள் தறிகெட்டு ஓடி, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் 30 பேர் லேசான காயம்அடைந்தனர். கோவில் தேரை இழுப்பதற்காக பக்தர்கள் கூடி நின்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications