தீபாவளி: அர்த்தங்கள் பலவிதம்

Subscribe to Oneindia Tamil

தீபாவளி. இது ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தரும் திருநாள்.

குழந்தைகளுக்கு புதுச் சட்டையும், வெடியும் போதும். அவர்களுக்கு சிறகு முளைத்துவிடும்.

ஒரு பட்டுச் சேலை போதும்...மனைவி கையில் கணவனே குழந்தையாகி விடுவான்.

மத்தாப்புகளின் வெளிச்சத்தில் குழந்தைகள் கூச்சலிடுவதையும், புதிய ஆடையில் மனைவி துள்ளுவதையும் பார்த்து மனம் நிறைவார்கள் கணவன்மார்கள்.

என் ஆளு டிரஸ்சை பர்த்தியா... ரொம்ப சந்தோஷமா இருக்காடா, அவள் கிட்ட இன்னக்கி சொல்லிறவா... வயதுக் கோளாறுகளிடம் தீபாவளிபடாதபாடு படும்.

தலைதீபாவளி என்றால் மாமியார் வீட்டு செகண்டு ரவுண்ட் சீர் வரிசையும் செய்முறைகளும் குவியும்.

பெரிசுகளின் பற்களுக்கும் முறுக்குகளுக்கும் இடையே ஒரு இஸ்ரேல்-பாலஸ்தீன கலவரமே நடக்கும்.

ரசிகர்களுக்கு தலைவர் படம் பார்த்தால் தான் தீபாவளி முடியும். தீபாவளிக்கு தலைவர் படம் வரவில்லையா, போஸ்டர்கள் ரெடியாகும். தலைவா! உன்படம் வெளியாகும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி.

Diwali Crackerபிளாக் டிக்கெட் விற்பவர்கள் கோன் பனேகா குரோர்பதி ரேஞ்சில் பணம் குவிக்கும் நாள் இது.

தண்ணி அடிக்காம ஒரு கொண்டாட்டமா? வைன் ஷாப்களில் நமது குடிமக்கள் நடமாட்டமும் தள்ளாட்டமும் அதிகம் இருக்கும்.

மச்சினி குடும்பம் வந்திருக்கு...மாமா வந்திட்டாரு... விருந்தினர் கூட்டம் அலைமோதும்.

ரயில், பஸ் எல்லாம் புல் . 12 மணி நேரம் நின்னுட்டே வந்தேன்... தூக்கம் தொலைத்துவிட்டு கண்கள் எல்லாம் சிவப்பாக வெளி ஊரில் இருந்து வந்துஇறங்கி தூங்கிக் கொண்டே கங்கா ஸ்நானத்தக்கு தயாராவார்கள்.

தீபாவளி ஸ்பெஷல்... ஒரு பல்பொடி வாங்கினால், வீடு இலவசம் ரேஞ்சுக்கு ஏமாற்று வேலை ஒரு புறம்.

இப்படி தீபாவளி ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் வைத்திருக்கிறது. ஆனால் மொத்தத்தில் இது அனைவருக்குமே மகிழ்ச்சியை அள்ளித் தருகிறபொன்னாள்.

உண்மையில் தீபாவளி தான் என்ன?

இதோ ஒரு லைட்டான புராணக் கதை.

நரகாசுரன் என்ற அசுரனை கண்ணன் வதை செய்ததை ஒட்டி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தேவர்களையும், மனிதர்களையும் அரசியல்வாதி ரேஞ்சில் நராகசுரன் வதைக்கிறான். பெருந் தொல்லை தருகிறான். தேவர்களின் தலைவனான இந்திரன்ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

Diwali Crackerபகவான் கிருஷ்ணரிடம் ஓடுகிறான் நரகாசுரன். கிருஷ்ணன் நராகசுரனுடன் போர் புரிய சத்யபாமாவுடன் புறப்படுகிறார். சத்யபாமா இப்போரில் சக்தியின்அவதாரமாக செயல்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நரகாசுரன் என்ற தீய சக்தி கண்ணன் - சத்யபாமாவால் அழிக்கப்பட்டு மக்கள் அசுரனின் கொடுமையிலினின்றும் விடுபட்ட நாளையே தீபாவளியாககொண்டாடுகிறோம்.

அரசியல்வாதிகள் கொடுமையிலிருந்து மக்கள் விடுபடும் நாள் தான் உண்மையான தீபாவளி என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+