நரகாசுரன் கொல்லப்பட்ட இடம் அஸ்ஸாம்!
ஆர். சுந்தர பாஸ்கர்
அஸ்ஸாம் என்றால் உல்பா தீவிரவதிகள், டீ எஸ்டேட்கள், பச்சை போர்த்திய மலைகள், பெய்யெனப் பெய்யும் மழை, சீனாவின் தொல்லை என்றுஎன்னென்னமோ சட்டென நினைவுக்கு வரும்.
தீபாவளிக்கும் அஸ்ஸாமுக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது தெரியுமா?
இந்த ஆண்டு தீபாவளி 26.10.2000, வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை பகவான் கிருஷ்ணன் நராகசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த நாள்.
இந்த அசுரன் எப்படி பிறந்தான். யார் யாருக்கு பிறந்தான், எப்படி அழிந்தான், எத்தனையோ அசுரர்கள், அரக்கர்களை மகாவிஷ்ணு அவதாகம் எடுத்துஅழித்திருக்கிறார். அவர்கள் இறப்பையெல்லாம் கொண்டாடாத நாம் ஏன் நராகசுரன் இறந்த நாளை மட்டும் கொண்டாடுகிறோம்.
அன்றைய தினம் அதிகாலை குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என ஏன் பெயர் என்பது பற்றி அறிய நாம் அதற்கான புராண கதையை தெரிந்து கொள்வதுஅவசியம்.
அஸ்ஸாம். உலகிலேயே அதிக மழைபெறும் பகுதியான சிரபுஞ்சியை அடக்கிய அழகிய மாநிலம். இங்கு தான் நராகசுரன் வாழ்ந்துவந்தான். இங்குதான்அவன் அழிக்கப்பட்டான் என்றால் ஆச்சரியாக இருக்கிறதா?ஆனால், அதுதான் புராணம் கூறும் உண்மை.
அஸ்ஸாமுக்கு காமரூபம் என்ற பெயரும் உண்டு. இந்த பெயர் ஏன் வந்தது என்றால் இங்கு காமா என்ற பெயரில் சக்தி இருக்கிறாள்.
அஸ்ஸாமுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்து கடலுக்கு கீழே மூழ்கியிருந்த பூமியைவராகமூர்த்தி தனது தெற்றுப்பல் நுனியில் தூக்கி வந்த போது அவரது பல் பட்ட இடமும் அஸ்ஸாம் தான்.
பூமாதேவிக்கும், வராக மூர்த்திக்கும் தொடு உணர்வு ஏற்பட்டதால் பிறந்தவன்தான் நரகாசுரன். பகாவானுக்கு அசுரன் மகனாகப்பிறக்கலாமா என கேட்கலாம்! நல்லது கெட்டது எல்லாவற்றுக்குமே மூலம் ஒரே பரமாத்மாதான் என்றுதானே நம் சாஸ்திரம் கூறுகிறது,அதை நிரூபிக்கும் விதமாகத்தான் பகவானுக்கும் பூமா தேவிக்கும் நரகாசுரன் பிறந்தான்.
நரகாசுரன் பிரம்மாவைக் குறித்து தவம் செய்து அரிய பல வரங்களைப் பெற்று மிகவும் பலத்துடன் விளங்கினான். நல்லவனுக்கு வந்தால் அதுநல்லவற்றிக்கு பயன்படும். அதுவே அசுரனுக்கு வந்தால் அது அழிவுக்குத்தானே பயன்படும். இதை நராசுரன் பொய்யாக்காமல் முடியும் வரைகெடுதல்கள் செய்து வந்தான்.
பூலோகத்தையே நரகம் போல் ஆக்கிவந்ததால் தான் இவனுக்கு நரகாசுரன் என பெயர் வந்தது எனவும் கூறப்படுவது உண்டு.
இவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு.அது பெளமன்என்பது. இதன் பொருள் பூமியின் புதல்வன் என்பது. இவன் கருமைக்கு உரிமையாளன் போல்கன்னங் கரேலென்று இருட்டிற்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கருப்பாக இருப்பான். அவன் நிறத்துக்கு ஏற்றாற் போல் செல்லும்இடமெல்லாவற்றையும் நரக இருட்டாக ஆக்கிக் கொண்டிருந்தான்.
அஸ்ஸாம் என்று தற்போது அழைக்கப்படும் காமரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஊரை தலைநகரமாகக்கிக்கொண்டு காட்டாட்சி நடத்திவந்தான் நரகாசுரன்.ஜ்யோதிஷபுரம் என்றால் பிரகாசமான நகரம் என்று பொருள், ப்ராக் என்றால் கிழக்குத்திசை என அர்த்தம்.இந்தியாவுக்கு கிழக்கே காமரூபம் இருந்ததால் தன்னுடை இருள் சூழ்ந்த நகருக்கு ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான் நரகாசுரன்.
இவன் தொல்லை இருந்து வந்தாலும் அவனைப் பற்றி பகவானிடம் நரகாசுரன் பற்றி முறையிடாமல் இருந்தான் இந்திரன். நரகாசுரன் பகவானின்மகனாயிற்றே! அவன் மீது முறையிட்டால் அது பகவானையே குறை கூறுவது போலாகும் என எண்ணி பொறுத்து வந்தான் இந்திரன்.
இந் நிலையில் பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தனது தாய்மாமனான கம்சனை அழித்தார். தன்னை எதிர்த்த ஜாரசந்தனையும் விரட்டிவிட்டுகிருஷ்ணபகவான் துவராகபுரியில் தங்கியிருந்தார். ருக்மிணியின் உறவினரோடு சண்டையிட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். சத்யபாமா உள்ளிட்ட அநேகபத்தினிகளையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்தார் கிருஷ்ண பகவான்.
தேவேந்திரன் பகவானிடம் நரகாசுரன் பற்றி முறையிட்டான்.
கிருஷ்ணர் கருடனை அழைத்து அவன் மேலேறி சத்யபாமைவையும் உடன் அழைத்துக் கொண்டு ப்ராக்ஜ்யயோதிஷபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சத்யபாமாவை பகவான் அழைத்துச் சென்றதற்கு காரணம் இருக்கிறது. அவள் பூமாதேவயின் அவதாரம்தான். ருக்மிணி ஸ்ரீதேவி. பாமா பூதேவி.பொதுவாக ருக்மிணிதான் அடக்கம், பொறுமை முதலான குணங்கள் கொண்டவள்.
பாமா அகங்காரம் கொண்டவள் என்பது போல் காட்டி பல கதைகள் உள்ளன. சத்யபாமாவிடம் உள்ள உயர்ந்த குணங்களை காட்டுவதற்காகவேஅவளை பகவான் தன்னுடன் அழைத்துச் சென்றார். பெற்ற பிள்ளையாய் இருந்தாலும், உலகம் முழுவதிற்கும் எதிரியாக இருக்கும் தன் மகன் சாகவேண்டும் என நினைத்தாள் அந்தப் புனிதத் தாய்.
சத்யபாமாவின் அந்த உயர்ந்த குணத்தை உலகுக்கு பறைசாற்றவே அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார் பகவான்.
ப்ராகஜ்யோதிஷபுரத்துக்குள் நுழைய முடியாதபடி பல கோட்டைகளை அமைத்து அதன் உள்ளே வாழ்ந்து வந்தான் நரகாசுரன்.
முதலில் வெளி எல்லையில் மலைகளால் ஆன கோட்டை; அதன் உள்ளே ஆயுதங்களால் ஆன கோட்டை; அதன் பின் நீரை மந்திர சக்தியால் ஆன தண்ணீர்கோட்டை, அதற்குள் நெருப்பால் ஆன கோட்டை, அதன் பின் காற்றால் ஆன வாயுக் கோட்டை என பல கோட்டைகளுக்குள் இருந்தான் அவன்.
கிருஷ்ணன் ஒவ்வொரு கோட்டையாக தகர்த்துக் கொண்டு சங்கை முழங்கி நரகாசுரனை போருக்கு அழைத்தார் கிருஷ்ணன். நரகாசுரன் மிகப் பெரிய யானைமேல் ஏறிக்கொண்டு போரிட வந்தான்.
கருடன் மேலமர்ந்து பகவான் போரிட்டார். கருடனும். சத்யபாமாவும் நரகாசுரன் படை பலத்தை குறைத்தனர். அசுர படை முழவதும் அழிக்கப்பட்டுகிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் நேருக்கு நேர் போர் நடந்தது.
கிருஷ்ணரின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நரகாசுரன் கஷ்டப்பட்டான். முடிவில் விடிகாலை நேரத்தில் சக்ராயுதத்தால் நராகாசுரனை சம்ஹாரம் செய்துஉலக மக்களுக்கு விமோசனம் அளித்தார்.
இறக்கும் சமயத்தில் நரகாசுரன் தான் அழிந்த தினத்தை உலகமெல்லாம் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டான்(கல்லுக்குள் ஈரம்!).
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications