சனியை ஏமாற்றிய விநாயகர்
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகாத் துயரம் போம்
நல்ல குணமதிக மாமருகனை
கோபுரத்தின் மேலிருக்கும்
செல்வ கணபதியை கை தொழுதக்கால்
-விநாயகர் ஸ்லோகம்
நவக்கிரகங்களில் சனி போல் கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது.
மனித வாழ்வில மூன்று முறை ஏழரை நாட்டுச்சனி என்று அழைக்கப்படும் ஏழரை ஆண்டு சனி தசை வரும்.
மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் சனி தசை தேவர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களுக்கு ஏழரை நாள்.
கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. விநாயகரை பிடிக்க வந்தார் சனீஸ்வரன்.
விநாயகரை வந்து வேண்டினார் சனீஸ்வரன். விநாயகப் பெருமானே என் கடமைப்படி நான் உங்களைஏழரை நாட்கள் பிடித்திருக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களையும் நீங்கள்அனுபவிக்க வேண்டும். என் கடமைையைச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்என்றார்.
விநாயகர் மறுக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என்தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடிக்கவிருப்பதை சொல்லி விட்டு வருகிறேன்.நீங்கள் நாளை என்னை வந்து பிடித்துக் கொள்ளலாம். என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்.
சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார்.
மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். என் முதுகில் என்னஎழுதியிருக்கிறீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளைவருகிறேன் என்று முதல் நாள் தான் எழுதியதையே படித்தார்.
சனீஸ்வரரே நீங்கள் சொன்னை சொல்லை காப்பாற்றுவீர்கள் சொன்னபடியே நடந்துகொள்வீர்கள். நீங்கள் தான் இப்போது இன்று போய் நாளை வருகிறேன் என்றுகூறினீர்கள். இன்று போய் நாளை வாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தார்.
மறுநாள் வந்தார். சனீஸ்வரர். முதல் நாள் கதையே அன்றும் தொடர்ந்தது. ஏழாவதுநாள் சனீஸ்வரன் இன்று போய் நாளை வருகிறேன் என்று படிதத்தும், விநாயகர்நீங்கள் எழுதியதை நீங்களே அழித்துவிட்டு நாளை வாருங்கள் என்றார்.
சனீஸ்வரனுக்கு ஒரே சந்தோஷம். நாளை விநாயகரை பிடித்துவிடலாம் என்றுமகிழ்ந்தார். அவர் மனதில் நினைத்ததை புரிந்து கொண்ட விநாயகர். சனீஸ்வரரேநீங்கள் கூறிய 7 நாட்கள் இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நீங்கள் என்னை பிடிக்கமுடியாது என்று கூறினார்.
சனீஸ்வரன் தோல்வியுடன் .திரும்பினார். சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர்.விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications