மீனாட்சி கல்யாண வைபோகமே !!
மதுரை:
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அருள்மிகு மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணவைபோகம் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 24, 2002) காலை 9.45 மணிக்கு விமரிசையாக நடந்தது.
கடந்த 15ம் தேதியே மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று முன் தினம்பட்டாபிஷேகமும், நேற்று திக் விஜயமும் நடந்தன.
இந்நிலையில் இன்று காலை அருள்மிகு மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவம் வெகு கோலாகலமாகநடந்து முடிந்தது.
வரலாறு:
மதுரையை ஆண்டு வந்த மலையத்துவஜ மன்னனின் மகளான மீனாட்சி ஆணுக்கு நகரான அனைத்து வகைபோர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்நடக்கிறது.
மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையேதிருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான்.
பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார்.
அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான். இப்படி ஒவ்வொருதிசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி.
இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான்மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன்வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி.
எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில்வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளைகீழே போட்டு விட்டு தலை குனிகிறார்.
அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மனாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார்அன்னை.
அப்போது சிவபெருமான், "அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோஅன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல்நீயே என் துணைவி" என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது. அன்றேஅன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்.
இதுதான் மீனாட்சி திருக்கல்யாணத்தின் பின்னணி. வட திசையில் பார்வதி-சிவபெருமான் திருக்கல்யாணம்நடந்தபோது, அதை தென் திசையில் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து மதுரையில் மீனாட்சியாக அவதாரம் பூண்ட பார்வதியும், சொக்கராக அவதரித்த சிவபெருமானும்மதுரையில் திருமணம் செய்து கொண்டதே, மீனாட்சி திருக்கல்யாணம் என்றும் கூறுவார்கள்.
திருமணத்தைக் கண்டு களித்த மக்கள்:
இப்படிப்பட்ட விசேஷமான மீனாட்சி திருக்கல்யாணம் புதன்கிழமை காலை விமரிசையாக நடந்தேறியது.அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தேவயானிசகிதம், பவளவாய் கனி பெருமாள் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர்.
இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்கள் புடை சூழ, பவளவாய் கனி பெருமாள், தனது தங்கை மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.
மீனாட்சியின் சார்பாக வைரம் என்ற பட்டரும், சோமசுந்தரப் பெருமாளின் சார்பாக பிச்சை என்ற பட்டரும்பிரதிநிதியாக இருந்து மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் காலை 9.45 மணிக்கு மீனாட்சி அம்மனின் கழுத்தில்வைரத் தாலி அணிவிக்கப்பட்டது.
அன்னை மீனாட்சியின் இந்தத் திருக்கல்யாண வைபோகத்தை மதுரையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள்கண்டு களித்தனர். மேலும் சில தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இத்திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்புசெய்யப்பட, லட்சக்கணக்கான தமிழர்கள் இதைக் கண்டு மகிழ்ந்தனர்.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் இருவரும் திருக்கல்யாணக் கோலத்தில் மதுரை மாநகரின் நான்கு மாசி வீதிகளையும்வியாழக்கிழமை காலை தேரில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதன் பிறகு சனிக்கிழமை கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் உள்புறம் மற்றும் நான்கு சித்திரை வீதிகளிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications