மதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள்
ஜனவரி 20, 2003
மதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள்
மதுரை:
பச்சைக் கிளியுடன் மதுரை மக்களுக்கு அருள் பாலித்து வரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிதாக 2 இருஅலெக்சாண்ட்ரியா வகை கிளிகள் வந்துள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 17 கிளிகள் அங்கு உள்ளன.கோவிலில் இதற்காகவே தனி இடம் உண்டு.
இந் நிலையில் கேரளாவிலிருந்து புதிதாக 2 அலெக்சாண்ட்ரியா வகை பச்சைக் கிளிகள் கோவிலுக்கு வந்துள்ளன.இந்த புதிய கிளிகளை இயற்கையான சூழலில் வளர்ப்பதற்குத் தேவையான ரூ. 3 லட்சம் செலவை ஏற்பதற்கு ஒருபக்தர் முன்வந்துள்ளார்.
தெப்பத்தில் உலா வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்
மதுரையில் பிரசித்தி பெற்ற தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடந்தது. இரவில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்று மதுரைமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மதுரை நகர விழாக்களில் முக்கியமானது தெப்பத்திருவிழா. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அன்னையும், சுந்தரேஸ்வரரும் வலம் வந்து அருள் பாலித்தனர்.
வானவேடிக்கை: மாலையில் மீண்டும் தெப்பம் உலா வந்தபோது வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான ரூபாய் செலவிலான பட்டாசுகளை,சிவகாசி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் வெடித்தனர். மதுரை நகர வான்வெளியை வெளிச்சப் புள்ளிகளாக்கினர்.
தெப்பக்குளம் அருகே உள்ள வைகை ஆற்றுப் பாலத்தில்இந்த வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications