பிரபாகரனை காட்டி கொடுத்தது யார்?போராளிகள்+ஐ.எஸ்.ஐ Vs இந்தியா; என்ன சொல்கிறது The Family Man-Season2?
சென்னை: அமேசான் பிரைமில் கடும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெளியாகி உள்ளது The Family Man - Season 2.
Recommended Video
The Family Man - Season1- சீரிசானது ஜம்மு காஷ்மீர் பிரச்சனை மற்றும் முஸ்லிம்களை மையமாக கொண்டதாக இருந்தது. பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. மேஜர் சமீர், சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் பயங்கரவாதிகளுடன் இணைந்து மிகப் பெரும் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டுவதும் அது முறியடிக்கப்படுவதுமாகவும் இருந்தது.
மாட்டிறைச்சி வைத்ததற்காக கொல்லப்படுதல், மாட்டிறைச்சியையே தாக்குதல் ஆயுதமாக கொண்டு செல்லும் கரீம் உள்ளிட்ட 3 இளைஞர்கள் படுகொலை செய்யப்படுதல், அதை போலி என்கவுண்ட்டராக காட்டுதல், ஜம்மு காஷ்மீரில் அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் போலீஸ் அதிகாரி, தினம் தினம் உங்களுக்கு எங்க விசுவாசத்தை காட்டனுமா? என கேட்கும் இந்திய ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர் என ஏகப்பட்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சியான TASC பிரிவு எப்படி முறியடிக்கிறது? TASC பிரிவின் அதிகாரி ஶ்ரீகாந்த் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகள் என காதலும் மோதலுமாக முதல் சீரிஸ் படுவிறுவிறுப்பாக இருந்தது. அதனால் முதல் சீரிஸ் பேசுபொருளாகவும் கவனத்தையும் ஈர்த்தது. அதேநேரத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் இல்லை. தீவிரவாதிகள் எப்படி அமெரிக்காவின் கூலிகளாக இருக்கின்றனர்? அரசுகளுக்கு அப்பால் நாடுகளின் புலனாய்வு முகாமைகள் எப்படி கைகோர்த்து சொந்த நாடுகளின் ஆதாயங்களுக்காக காட்டி கொடுக்கின்றன என்கிற காட்சிகளும் அந்த தொடரில் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்துதான்ன் The Family Man - Season 2 வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தாங்கள் நடத்த திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் ப்ளான் A முறியடிக்கப்பட்டதால் 2-வது சதித்திட்டத்தை செயல்படுத்த முனைவதும் அது என்னவானது என்பதுதான் இதன் அடிப்படை. இந்த 2-வது தொடரில் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகள், ஈழ விடுதலைப் போராளி குழு ஒன்றை தங்கள் வலைக்குள் கொண்டு வந்து கூட்டாளியாக்கிக் கொண்டு நாசகார திட்டத்தை செயல்படுத்துவதை பற்றி விவரிக்கிறது. வெறும் தீவிரவாதிகள், புலனாய்வாளர்கள் சாகசங்கள் என்பதுடன் மட்டுமல்லாது முதல் தொடரைப் போலவே உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை ஏராளமான சோ கால்ட் குறியீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தொடரின் தொடக்கமே ஈழ விடுதலைக் குழுவின் தலைவர் பாஸ்கரன், அரசியல் பிரிவு தலைவர் தீபன், வெளியுறவு விவகாரங்களுக்கான சுப்பு என்ற சுப்பிரமணியம் பழனிவேல் என மூவரணியை காட்டுகிறது. இது அப்படியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடக்க காலங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது. அதாவது பிரபாகரன், மாத்தையா, கிட்டு அல்லது பிரபாகரன், கே.பி, கிட்டு அல்லது பிரபாகரன், கே.பி., பாலசிங்கம் என்கிற சாய்ல்களை வெளிப்படுத்துவதாக இந்த காட்சி அமைப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே மெட்ராஸ் கபே திரைப்படத்தில் பிரபாகரனுக்கு வைக்கப்பட்ட பாஸ்கரன் என்ற பெயர்தான் இந்த தொடரிலும் வைக்கப்பட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழகத்தில் 1970களில் குட்டிமணி, தங்கதுரை காலம் முதல் காலந்தோறும் ஈழ விடுதலைக் குழுக்கள் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவது அல்லது சிறையில் அடைக்கப்படுவது என்பது தொடருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழ விடுதலை இயக்கத்தின் வெளியுறவு பொறுப்பாளர் சுப்பு, காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படி ஈழ விடுதலை குழு தலைவர்களில் ஒருவரான சுப்புவை கைது செய்வதற்கான காரணம்தான் சர்வதேச அரசியலைப் பேசுகிறது. இலங்கையின் வடக்கு பகுதியில் துறைமுகம் ஒன்றை கட்டமைக்க சீனாவுக்கு அனுமதி தரப் போகிறது இலங்கை; இதனை தடுக்க இந்திய பிரதமர் திருமதி பாசு தீவிரம் காட்டுகிறார். இதற்காக இலங்கைக்கு இந்தியா தருகிற பரிசுதான் ஈழ விடுதலை தலைவர் சுப்பு. சுப்புவை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க நினைக்கிறது இந்திய மத்திய அரசு. சென்னையில் தஞ்சமடைந்த சுப்புவை எப்படி ஒரு எம்.பி. காட்டி கொடுக்கிறார் என்கிற காட்சியும் கூட தமிழகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிற பல காட்டி கொடுப்புகளின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இப்படி இந்தியாவுக்கும் ஈழ விடுதலை குழுவுக்கும் இடையேயான மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டம் போடுகிறது ஐ.எஸ். பயங்கரவாத கும்பல். இதனால் சென்னையில் ஈழ விடுதலை சுப்புவை ஸ்கூட்டர் வெடிகுண்டு மூலம்ம் கொல்கிறது. இந்த படுகொலையால் இந்தியா மீது ஈழ விடுதலை குழு தலைவரான, நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமரான பாஸ்கரன் கடும் கோபம் கொள்ள வைக்கப்படுகிறார். இந்த கோபத்தை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. -ன் மேஜர் சமீர் பயன்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டுகிறார். பிறகு என்ன ஈழ விடுதலை குழுவின் ஸ்லீப்பர் செல்களும் ஐஎஸ் பயங்கரவாதிகளும் இணைந்து இந்திய பிரதமர் பாசுவை படுகொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்த திட்டத்தை என்.ஐ.ஏ.வின் TASC எப்படி எதிர்கொண்டது? சதித் திட்டம் நிறைவேறியதா? என்பதை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது The Family Man - Season2-வது தொடர்.
ஈழ விடுதலை போராளிகளின் செயல் தளமாக இருந்த வேதாரண்யம், வேதாரண்யத்தில் இருந்த மக்கள் ஆதரவு ஆகியவையும் வேறு ஒரு பெயரில் போகிற போக்கில் காட்டப்படுகிறது. ஈழ விடுதலை குழுவின் ஸ்லீப்பர் செல்லாக இருகக் கூடியவர்தான் நடிகை சமந்தா எனும் ராஜி. மில் தொழிலாளியாக பணிபுரிந்து கொண்டு வக்கிர மனிதர்களிடம் சிக்கி தவிப்பதும் அதை கர்ண கொடூரமாக முறியடிக்கிற சில காட்சிகளும் ரொம்பவே டூ மச் என சொல்ல வைக்கிறது. சமந்தா தொடர்பான பல காட்சிகள் ரொம்பவும் மிகைப்படுத்தலாகவே உறுத்துகிறது. ஈழ விடுதலைக் களத்தில் இருக்கிற பெண் போராளிகளுக்குள் ஒரு பயங்கரமான குரூரம் இருப்பதாக காட்டப்படுவதை சகிக்க முடியாது. இந்த அபத்த காட்சிகள், அவதூறு காட்சி அமைப்புகள்தான் தமிழகத்தில் எதிர்ப்பு எழவும் காரணம்.
இலங்கையுடன் நெருங்கும் சீனாவை இந்தியா தன்வசமாக்கிக் கொள்ள முனைகிறது; இதற்காக ஈழ விடுதலை குழு தலைவர் பலி கொடுக்கப்படுகிறார். இதனால் இந்தியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற அடிப்படையில் பாக். ஐ.எஸ்.ஐ.- ஈழ விடுதலை குழு கை கோர்க்கின்றன. அத்துடன் மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் ஈழ விடுதலை குழுக்களை, ஈழ விடுதலை பிரச்சனையை எப்படி எல்லாம் அலட்சியமாகக் கையாண்டார்கள் என்பதும் பல்வேறு காட்சிகளில் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் இந்தியா- இலங்கை இணக்கமான உறவுக்கு எதிரான கொந்தளிப்பை எள்ளி நகையாடக் கூடியதான இன்று வரை மத்திய அரசு கடைபிடிக்கும் போக்கும் இந்த தொடரின் காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு, ரா, ஐபி போன்றவைகள் உளவாளிகளுடன் எப்படியான உறவுகளை கையாளுகின்றனர்; உளவாளிகள் எப்படி எல்லாம் தகவல் கொடுக்கின்றனர்; பிடிபடும் தீவிரவாதிகள், போராளிகளிடம் நயவஞ்சமாக விசாரணை அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறைகள் என உலக அரசுகள் என்ற அமைப்புகளின் இருட்டு முகங்களும் இந்த படத்திக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவைகளுக்கு அப்பால் மனோஜ் பாஜ்பாய்- பிரியாமணியின் குடும்ப காட்சிகள் ரசிக்கக் கூடியதாகவும் சற்றே இளைப்பாறிக் கொள்ளும் இடமாகவும் இருந்துவிடுகின்றன. கொள்கையை வகுக்கும் அரசு கட்டிடங்களுக்குளும் அரசியல்வாதிகளின் உள்ளுக்குள்ளும்தான் ஒவ்வொரு வரலாற்று சம்பவங்களிலும் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த மர்மங்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடும் என்பதை பல இடங்களில் காட்டுகிறது இந்த தொடர். அதேநேரத்தில் ஈழ விடுதலை குழு தலைவர் பாஸ்கரனை இந்தியாவின் நெருக்கடிக்காக ஈழ விடுதலை குழுவின் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமரே காட்டிக் கொடுக்கிறார் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ஏனெனில் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஈழ ஆயுதக் குழு அழிக்கப்பட்டது. ஆனால் அதன் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி எனும் கே. பத்மநாபன், இன்னமும் இலங்கையில் சுதந்திரமாகவே இருக்கிறார். அவரது காட்டிக் கொடுப்புதான் ஈழ விடுதலை போரின் பேரழிவுக்கு காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இதை வைத்துதான் பாஸ்கரனை ஆரம்ப கால தோழர் தீபன் காட்டி கொடுத்தார் என்பதாக The Family Man - Season2 காட்சிகள் இடம்பெற்றதா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.
முதல் தொடரில் காஷ்மீர் பிரச்சனை; 2-வது தொடரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிளஸ் ஈழ விடுதலை குழு என கலந்து கட்டி பற்றி எரியும் பிரச்சனைகளில் தங்கள் பங்குக்கு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது The Family Man - Season2... நிஜங்களின் வலி தெரியாமல்!
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications