சனிப்பெயர்ச்சி: தட்டி தூக்கும் "தனுசு".. அர்த்தாஷ்டம சனியின் பலன்கள், பரிகாரங்கள் - முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Dhanusu

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் 4 ஆம் இடத்தில் சனி வருகிறார் அர்த்தாஷ்டம சனி. கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்துக்குச் சென்று வழிபடுவது நல்ல அனுகூலத்தை தரும். சர்க்கரை, கொழுப்பு, தைராய்டு, ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். துணை அல்லது துணைவியாருக்கு அனுகூலம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

7 ஆம் இடத்தில் குரு, 3 ஆம் இடத்தில் ராகு, 9 ஆம் இடத்தில் கேது வருகிறார். பெற்றோர்களின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாய் தந்தை வழி உறவுகளில் கவனம் தேவை. பூர்வீக குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருவது நல்லது. எல்லா விஷயங்களிலும் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். பிறரின் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிடுவது, மற்றவர்கள் உங்களுடைய விஷயங்களில் தலையிடுவது கூடவே கூடாது.

ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் வெளிநாடு போவதற்கான வாய்ப்புள்ளது . பயணங்கள் சமயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நல்லது. வேலை செய்பவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. வன்மம் கூடுவதற்கான வாய்ப்புள்ளது. 9 இல் கேது வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கால் வலி, முட்டி வலியால் பாதிக்கப்படுவீர்கள். விநாயகர், விஷ்ணு, அனுமன் வழிபாடு நல்ல நன்மைகளைத் தரும். விநாயகர், விஷ்ணு, அனுமன் காயத்ரியை படிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது தேக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலையாவதற்கான பலன்கலைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+