Hanuman Jayanthi: இன்று அனுமன் ஜெயந்தி! நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை!
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் கோயில்கள் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 1லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தப்பட்டது.

மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அதிலும் மார்கழி அமாவாசையில் வரும் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவை அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் தினசரி அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 11 மணி வரை வடை மாலையில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அப்போது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1008 லிட்டர் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பார்.
அனுமன் ஜெயந்தியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழி என தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மார்கழி மாத அமாவாசை, வெள்ளிக்கிழமை சேர்ந்த நாளில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி வந்திருப்பதால் இன்று நடத்தப்படும் வழிபாடுகள் அதிக பலன் தரும். ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் தான் இருப்பேன் என கூறி, கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை கூட வேண்டாம் என்று சொன்னவர் ஜெய் அனுமன். அனுமன் கோயில்களில் 1008, 10008, 100008 என வடை மாலைகள் சாற்றப்படுவது வழக்கம்.
இந்த நன்னாளில் அனுமன் கோயிலுக்கு சென்று வெண்ணெய், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை உள்ளிட்டவைகளை அனுமனுக்கு சாற்றலாம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்துவிடுவார். ராமாயணம் வாசிக்கப்படும் இடத்தில் பிரத்யட்சமாக ஹனுமன் வீற்றிருப்பார் என்பது உண்மை. அதனாலேயே இந்த காலகட்டத்திலும் ராமாயண சொற்பொழிவு நடைபெறும் மேடைகளில் அனுமனுக்கு தனியாக ஆசனம் அமைத்து வைத்திருப்பார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications