ராக்காயி அம்மன் வரலாறு என்ன? தீர்த்தம் தரும் அற்புத பலன்கள் பற்றி தெரியுமா? மதுரை அழகர் மலை அற்புதம்
மதுரை: அழகர் கோவிலுக்குப் போறீங்களா? ராக்காயி அம்மன் தீர்த்தத்தில் ஒரு முக்கு குளிச்சிட்டு வாங்க! ராக்காயி அம்மன் கோயிலில் இருக்கிற தீர்த்தம் மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கும், திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தோல் வியாதி இருக்கறவங்களுக்கும் நல்ல அருமருந்து.
அழகர் மலையில கீழ 18-ம் படி கருப்பனும் அழகர் சாமியும் இருக்காங்க. மேல ராக்காயி அம்மன் கோயிலில் போய் தீர்த்தம் ஆடிட்டு, ராக்காயி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கொஞ்சம் மலையிலிருந்து கீழே வந்தால் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. அங்கே தரிசனம் செய்துவிட்டு, அழகர் கோவிலுக்கு வர வேண்டும்.

முருகன் கோவிலிருந்து அழகர் கோவிலுக்கு அடிக்கடி அரசு பேருந்துகளும் இயங்குகின்றன. கொஞ்சம் தூரம்தான் என்றாலும் மலைப்பகுதி என்பதால் வாகனத்தில் செல்வது ஈஸியாக இருக்கும். இவ்விரு கோவில் தரிசனங்களை முடித்த பிறகுதான், பெருமாளை தரிசிக்கணும் என்பதுதான் ஐதீகம்.
அழகர் கோவிலில் 18ம்படி கருப்பசாமியையும், அழகரையும் தரிசித்துவிட்டு கருப்பசாமி சன்னதி முன்பாக சிதறு தேங்காய் எறிந்துவிட்டு, அங்கேயுள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போய் பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் வரும்.
சரி ராக்காயி அம்மன் வரலாறு என்ன, கருப்பணசாமியோட தங்கச்சியா, இல்ல பெருமாளுக்கு சொந்தமானவங்களான்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு.
ராக்காயி சாமுண்டீஸ்வரியோட அம்சம். சசிதேவிய எரிச்ச உடனே சிவபெருமானோட கோபத்திலிருந்து வந்த ஆவேச அவதாரங்கள் சப்த மாதர்களான சாமுண்டீஸ்வரி. பத்ரகாளி, வீரபத்திரர், கருப்பன் உள்ளிட்டோர். அதனால ராக்காயி கருப்பண்ணசாமிக்கு தங்கச்சி முறை. கருப்பண்ணசாமி 18ம்படி கருப்புசாமியா இங்கே தலம் கொண்டு உள்ளார்.
ஒரு தரப்பு வரலாறு என்ன சொல்ல வருதுன்னா பெருமாள் அவதாரம் எடுக்கும்போது, பிரம்மர் தன்னுடைய கமலத்திலிருந்து தண்ணி ஊத்தி பாத பூஜை பண்ணாராம். அப்போ ஒரு துளி விழுந்த இடம்தான் ராக்காயி அம்மன் கோவில். வனதேவதையா இருந்த ராக்காயி, அந்த தீர்த்தம் பட்ட உடனே தேவதையா மாறிட்டாங்கன்னு சொல்றாங்க.
அந்த தீர்த்தத்துல குளிச்சா மனநலம் சரியில்லாதவங்களுக்கும், ஸ்கின் அலர்ஜி இருக்கறவங்களுக்கும் நல்ல சேஞ்சஸ் கிடைக்கும். பெண்களுக்கு இருக்கக்கூடிய ஹார்மோன் இம்பேலன்ஸ், பீரியட்ஸ் இர்ரெகுலர் ஆகுறது, பிசிஓடி பிரச்னை இருக்கறவங்களுக்கு அந்தத் தீர்த்தம் ரொம்ப நல்லது. சில பேருடைய பூர்வ கர்மம் அதிகமா இருந்தா, அங்க போயிட்டு வந்த உடனே சேஞ்சஸ் தெரியும்.
சாதாரண வழி, கட்டண வழி என்று இரு வழிகள் உள்ளன. தீர்த்தத்திற்கு போய், குளித்துவிட்டு ஆடை மாற்ற இரும்பிலான தனித்தனி ரூம்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ராக்காயி அம்மன் தீர்த்தம் என்பது மதுரை அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தைக் குறிக்கும் என்பதை மறவாதீர்கள்.
ராக்காயி என்று சொல்லக்கூடியது 18 கருப்பருடைய தங்கை, சாமுண்டி அம்சம். கண்ணுக்கு தெரிஞ்ச தேவதையை பார்க்கணும்னா, ராக்காயி அம்மனைப் பார்த்துட்டு வரலாம். ரவிக்க துணி வெத்தலை பாக்கு வச்சு ராக்காயி அம்மனை கும்பிட்டா வீட்டுக்கே வந்து உட்கார்ந்துருவாங்களாம். அந்த அளவுக்கு வைப்ரேஷன் நிறைஞ்ச இடம் அது.
பிரம்மனோட கமல குண்டலத்துல இருந்து வந்த தண்ணி பெருமாள் பாதத்துல பட்டு ராக்காயி மேல பட்டதுனால வன தேவதையா இருந்தவங்க தேவதையா மாறிட்டாங்க. ராக்காயி அம்மன் கோவில் அருகேயுள்ள தீர்த்தத் தண்ணிய எடுத்துட்டு வந்து தான் பெருமாளுக்கு அபிஷேகம் பண்றாங்க, நைவேத்தியம் பண்றாங்க. ராக்காயியைப் பார்த்தா எல்லா கஷ்டமும் போயிடும்!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications